Friday, October 4, 2024
Home » பசுமை மீதான ஈடுபாட்டுக்காக 3 விருதுகளை வென்ற DFCC

பசுமை மீதான ஈடுபாட்டுக்காக 3 விருதுகளை வென்ற DFCC

by Rizwan Segu Mohideen
April 9, 2024 11:54 am 0 comment

Institute of Chartered Professional Managers of Sri Lanka (CPM)இன் ஏற்பாட்டில் அண்மையில் இடம்பெற்ற CPM Best Management Practices Company Awards 2024 விருதுகள் நிகழ்வில் ஒட்டுமொத்த வெற்றியாளர் – தங்கம் என்ற விருதை DFCC வங்கி தனதாக்கியுள்ளது.

வங்கி தனது கிளை வலையமைப்பு முழுவதுமாக முன்னெடுத்த காகிதம் இன்றி செயல்பாடுகளை மேற்கொள்ளும் முயற்சிக்காக வங்கித்துறையின் வெற்றியாளர் – தனியார் துறைப் பிரிவு மற்றும் மிகச் சிறந்த முகாமைத்துவ நடைமுறைக்கான மகத்துவத்திற்கான விருது ஆகியவற்றையும் DFCC வங்கி வென்றுள்ளது.

அசங்க உடுவல – பிரதம செயல்பாட்டு அதிகாரி, நில்மினி குணரட்ன – உப தலைவர், சந்தைப்படுத்தல் மற்றும் நிலைபேறாண்மை தலைமை அதிகாரி, மற்றும் நளின் கருணாதிலக – உப தலைவர், நிலைபேறாண்மை ஆகியோர் அடங்கிய குழுவினர் DFCCவங்கியின் சார்பில் இவ்விருதுகளைப் பெற்றுக்கொண்டனர்.

2030 ஆம் ஆண்டில் காபன் நடுநிலை வகிக்கும் வங்கியாக மாற வேண்டும் என்ற தனது நோக்கத்தினூடாக, சாதகமான சமூக மற்றும் சூழல் மாற்றத்தை முன்னெடுத்துச் செல்வதில் DFCC வங்கியின் அர்ப்பணிப்பை மதிப்பு மிக்க இவ்விருதுகள் பிரதிபலிக்கின்றன.

காகிதங்கள் இன்றிய செயல்பாடுகளினூடாக வளத்திறனில் வங்கி செலுத்தியுள்ள கவனம் இந்த இலக்கிற்குமிகவும் முக்கியமானதொரு பங்களிப்பாக உள்ளது.

அந்த வகையில், 2024 ஆம் ஆண்டில் உள்ளகரீதியாக 100% காகிதமின்றிய செயல்பாடுகளை எட்டவும், 2025 ஆம் ஆண்டில் வெளிப்புற ரீதியாக 50% காகிதமின்றிய செயல்பாடுகளை எட்டவும் DFCC வங்கி திட்டமிட்டுள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT

Hutch Hutch
x