692
நாவலப்பிட்டி தொலஸ்பாகே பகுதியிலிருந்து நாவலப்பிட்டி நோக்கிச் சென்ற இ.போ.சபைக்கு சொந்தமான பஸ் ஒன்று வீதிக்கு அருகில் உள்ள மண்மேட்டில் மோதி விபத்துக்குள்ளானதில் பஸ்ஸில் பயணித்த 3 பாடசாலை மாணவர்கள் உட்பட 9 பேர் காயமடைந்து நாவலப்பிட்டி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.
நாவலப்பிட்டி தொலஸ்பாகே பிரதான வீதியில் உடுவெல்ல பிரதேசத்தில் இன்று (09) காலை 6.45 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
பஸ் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த நிலையில் வீதியில் உள்ள மண்மேட்டில் மோதியதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.