Saturday, July 13, 2024
Home » கெத்தாரமை ஸ்ரீ கனகதுர்க்கை அம்மன் ஆலய தேர்த் திருவிழா

கெத்தாரமை ஸ்ரீ கனகதுர்க்கை அம்மன் ஆலய தேர்த் திருவிழா

by damith
April 8, 2024 11:25 am 0 comment

கொழும்பு 14, கிரேண்ட்பாஸ், கெத்தாரமை சர்வதேச கிரிக் கெட் மைதானத்திற்கு அருகில் அமைந்திருக்கும் ஸ்ரீ கனகதுர்க்கை அம்மன் (முனியப்பர் ) ஆலயத்தின் 12ஆவது ஆண்டு வருஷாபிஷேக பெருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. இவ்வாலயத்தில் நாளை 9ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை7 மணிக்கு கொழும்பு 12, ஆமர்வீதி பெரடைஸ் பிளேஸ் ஸ்ரீ பத்ரகாளியம்மன் திருக்ேகாவிலிருந்து பாற்குட பவனி ஆரம்பமாகும். இந்த பாற்குடபவனி ஆமர்வீதி, கிரேண்ட்பாஸ் வீதி, டொக்டர் பாபபுள்ள பிளேஸ் வழியாக ஆலயத்தை அடைந்ததும் அம்பாளுக்கு 1008 சத சங்காபிஷேகம், பாலாபிஷேகம் என்பன நடத்தப்பட்டு அன்னதானம் வழங்கப்படும். எதிர்வரும் 10 ஆம் திகதி காலை 9.30 மணிக்கு இடம்பெறும் வசந்த மண்டப பூஜையைத் தொடர்ந்து ரதபவனி இடம்பெறும். எதிர்வரும் 11 ஆம் திகதி காலை 9.30 மணிக்கு தீர்த்தோற்சவமும் மாலை 6 மணிக்கு திருவூஞ்சல் திருவிழாவும் கொடியிறக்கமும் இடம்பெறும். எதிர்வரும் 12 ஆம் திகதி வௌ்ளிக்கிழமை மாலை 4 மணிக்கு பூங்காவனமும் எதிர்வரும் 13 ஆம் திகதி சனிக்கிழமை மாலை 4 மணிக்கு வைரவர் மடையும் இடம்பெறும்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT