167
நாட்டில் எரிபொருள் பாவனை 50 வீதத்தால் குறைவடைந்துள்ளதாக எரிபொருள் விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அந்த வகையில் எரிபொருள் விற்பனையும் குறைவடைந்துள்ளதாகவும் எரிபொருள் பாவனை குறைவதற்கு நாட்டின் பொருளாதார நிலைமையும் ஒரு காரணம் என்றும் அந்த சங்கத்தின் தலைவர் ஷெல்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். நாட்டில் தற்போது எந்தவித தட்டுப்பாடுமின்றி அனைத்து எரிபொருட்களும் கிடைக்கக்கூடிய நிலையிலும் அதன் பாவனை குறைவடைந்துள்ளதாக ஷெல்டன் பெர்னாண்டோ மேலும் தெரிவித்துள்ளார்.
லோரன்ஸ் செல்வநாயகம்