Thursday, July 25, 2024
Home » IPL 2024 LSG vs GT: 33 ஓட்டங்கள் வித்தியாசத்தில் குஜராத்தை வீழ்த்தியது லக்னோ

IPL 2024 LSG vs GT: 33 ஓட்டங்கள் வித்தியாசத்தில் குஜராத்தை வீழ்த்தியது லக்னோ

by Prashahini
April 8, 2024 8:21 am 0 comment

IPL T20 கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை 33 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்.

லக்னோவில் மாலை 7.30 மணியளவில் தொடங்கிய ஆட்டத்தில் கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி நாணயச்சுழற்சியில் வென்று துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது.

லக்னோ அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக குயிண்டன் டி காக் மற்றும் கே.எல்.ராகுல் இறங்கினர். இதில் குயிண்டன் நான்கு பந்துகளில் ஒரு சிக்ஸ் அடித்து வெளியேறினார். இன்னொரு புறம் கே.எல்.ராகுல் 31 பந்துகளுக்கு 33 ஓட்டங்கள் எடுத்தார்.

தொடர்ந்து இறங்கிய தேவ்தத் படிக்கல் 7 ஓட்டங்கள் ,மார்க்கஸ் ஸ்டாயினிஸ் 58 ஓட்டங்கள், நிக்கோலஸ் பூரன் 32 ஓட்டங்கள் ,ஆயுஷ் படோனி 20 ஓட்டங்கள் எடுத்துனர். இறுதியாக குருணல் பாண்டிய இரண்டு ஓட்டங்களுடன் அவுட் ஆகாமல் இருந்தார். 20 ஓவர்கள் முடிவில் லக்னோ அணி மொத்தம் 163 ஓட்டங்கள் எடுத்திருந்தது.

164 ஓட்டங்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் சாய் சுதர்ஷன் (31 ஓட்டங்கள்) மற்றும் ஷுப்மன் கில் (21 ஓட்டங்கள்) இருவரும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

ஆனால் அடுத்தடுத்து இறங்கிய கேன் வில்லியம்சன், பி.ஆர்.சரத் தலா ஒன்று மற்றும் இரண்டு ஓட்டங்களுடன் அவுட் ஆகவும் அணி தடுமாறியது. விஜய் ஷங்கர் 17 ஓட்டங்கள், தர்ஷன் 12 ஓட்டங்கள் , ராகுல் தேவாட்டியா 30 ஓட்டங்கள், ரஷீத் கான் 0, உமேஷ் யாதவ் இரண்டு ஓட்டங்கள் எடுத்தனர்.

இறுதியாக நூர் அகமது அடித்த பந்தை குயிண்டன் கேட்ச் செய்ததைத் தொடர்ந்து 33 ஓட்டங்கள் வித்தியாசத்தில் குஜராத் அணியை வீழ்த்தியது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT