ஒரேயொரு வர்த்தக நாமத்தின் கீழ் செயற்படும் இலங்கையின் மிகப் பெரும் ஆடைகளின் காட்சியறை வலையமைப்பான, வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை வென்ற GFlock நிறுவனம், தனது வர்த்தக நடவடிக்கைகளை விரிவுபடுத்தும் வகையில் காலியில் தனது புதிய கிளையை திறந்து வைத்துள்ளது.
GFlock இன் தலைவர் ரணில் வில்லத்தரகே தலைமையில் இப்புதிய கிளை திறந்து வைக்கப்பட்டுள்ளது.
ஆடைத் துறையில் வாடிக்கையாளர்களுக்கு புத்தாக்கமான அனுபவத்தை வழங்குவதற்காக, நவநாகரீக ஆடைகளுடன், நவீன வசதிகளுடன் கூடிய இப்புதிய கிளை திறந்து வைக்கப்பட்டுள்ளது. உள்நாட்டிலும் உலகளாவிய ரீதியிலும் நுகர்வோர் மத்தியில் நம்பிக்கையையும் நற்பெயரையும் பெற்றுள்ள ஆடைகளின் முதற்தர உள்ளூர் வர்த்தக நாமமான GFlock, அதன் கிளை வலையமைப்பை மேலும் விரிவுபடுத்தி, மேல் மாகாணத்திற்கு வெளியே தனது முதலாவது கிளையைத் திறந்துள்ளது.
வழக்கமான நடைமுறைகளை கடந்து, வாடிக்கையாளர்களுக்கு புத்தம் புதிய பேஷன்களில் அமைந்த, பல்வகை ஆடைகளை தெரிவு செய்யும் வகையில், உரிய வசதிகள் இங்கு ஏற்படுத்தப்பட்டுள்ளன. இவை உயர்தர துணிகளைப் பயன்படுத்தி, இளம் வடிவமைப்பாளர்களின் அனுபவத்தின் மூலம் உருவாக்கப்பட்ட நவீன பாணியில் அமைந்துள்ளன. இது நவீன காட்சி வர்த்தக தொழில்நுட்பத்துடன் அமைந்துள்ளதோடு, மிகத் தௌிவான வித்தியாசத்தில் அமைந்த, ஆக்கபூர்வமான ஆடைகளைத் தெரிவு செய்து, கொள்வனவு செய்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தமது மதிப்பிற்குரிய வாடிக்கையாளர்களுக்கு நட்பு மிக்க பணியாளர்களின் விரிவான சேவையை வழங்குவதற்கும் இங்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பத்து வருடங்களுக்கும் மேலாக உள்நாட்டு, வெளிநாட்டு நுகர்வோரின் இதயங்களை வென்றுள்ள GFlock வர்த்தகநாமம், வாடிக்கையாளர்களுடன் நெருக்கமாக செயற்பட்டு வருகின்றது. தற்போது, GFlock உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் ஒரு முன்னணி வர்த்தகநாமமாக மாறியுள்ளது. ஆக்கபூர்வமான திறமை கொண்ட இளைஞர்களின் அறிவு, அனுபவம், சிறந்த வழிகாட்டலின் கீழ், இலங்கையின் தேசிய பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கு பங்களிக்கும் ஒரு உள்ளூர் வர்த்தகநாமமாக GFlock நிறுவனத்தை குறிப்பிட முடியும்.
ஒழுக்கம், உறுதிப்பாடு, பரோபகாரம், முயற்சி மற்றும் நேர்மை ஆகியவற்றை மனதில் கொண்டு, வாடிக்கையாளர்களின் உரிமைகள் மற்றும் தேவைகளை மதித்து, GFlock குழுமமானது தனது செயற்பாடுகளை தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகிறது. GFlock கிளை வலையமைப்பானது கொள்ளுப்பிட்டி, பெலவத்தை, நீர்கொழும்பு, தெல்கந்த, வத்தளை மற்றும் தற்போது காலியிலும் வாடிக்கையாளர்களுக்காக திறக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.