Friday, July 26, 2024
Home » மகத்துவம் மிக்க இறுதிப் பத்து நாட்கள்

மகத்துவம் மிக்க இறுதிப் பத்து நாட்கள்

by Gayan Abeykoon
April 5, 2024 12:34 pm 0 comment

நோன்பின் நற்கூலியையும் அதன் நன்மைகளையும் கருத்தில் கொண்டு முழு ஆர்வத்துடன் இறைநம்பிக்கையாளர்கள் ரமழான் நோன்பு கடமையை நிறைவேற்றி வருகிறார்கள். இது மாபெரும் இறை வழிபாடு. இதற்கு ஈடாக வேறு எந்த இறைவழிபாடும் கிடையாது.

அதனால் தான் நோன்பு ஒவ்வொரு சமுதாயத்தின் மீதும் கடமையாக்கப்பட்டிருக்கிறது. இறை நம்பிக்கையாளர்களே.. உங்களுக்கு முன்னிருந்த (நபிமார்களைப் பின்பற்றியவர்கள்) மீது கடமையாக்கப்பட்டது போன்று உங்கள் மீதும் நோன்பு கடமையாக்கப்பட்டிருக்கிறது. (அதன் மூலம்) நீங்கள் இறையச்சம் உடையவர்களாகலாம் (2:283) ன்று அல் குர்ஆன் குறிப்பிட்டிருக்கிறது.

ஒரு தடவை நபி (ஸல்) அவர்கள், ‘நோன்பு ஒரு கேடயமாகும். எவர் நோன்பு நோற்ற பின்பு பொய்யுரைப்பதை கைவிடவில்லையோ அவன் பசித்திருப்பதும் தாகித்திருப்பதும் இறைவனுக்கு எந்த தேவையுமற்றது என்றுள்ளார்கள். (ஆதாரம்: புஹாரி)

மேலும், எவர் இறை நம்பிக்கை கொண்ட நிலையில் நோன்பு நோற்கின்றாறோ அவர் முன் செய்த பாவங்கள் அனைத்தையும் இறைவன் மன்னித்து விடுகின்றான் எனவும் நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். அதனால் ரமழான் மாதத்தின் பெரும்பகுதி நிறைவடைந்துள்ள நிலையில் எஞ்சியுள்ள நோன்புகளையும் நோற்று இறை வணக்கங்களில் ஈடுபடத் தவறலாகாது. இது மிகவும் முக்கியத்துவம் மிக்க காலப்பகுதியாகும்.

அதேநேரம் இஸ்லாம் வழங்கியுள்ள சலுகைகள் இன்றி ரமழானில் ஒரு நோன்பை நோற்காமல் இருந்து விட்டு பிறகு நோற்பது வாழ்நாள் முழுவதும் நோற்பதற்கு அது ஈடாகாது என்றும் அன்னார் கூறியுள்ளார்கள்.

(ஆதாரம்: திர்மிதி)

ஒரு தடவை ஆபூஹுரைரா (ரழி) அவர்கள், நோன்பானது தமது அன்றாட செயற்பாடுகளில் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை என்பதை வெளிப்படுத்தும் வகையில் ஒருவரது நோன்பு அமைந்திருக்கும் போது அவர் தம் தலையில் எண்ணெய் தடவிக் கொள்வது சிறந்தது என்று குறிப்பிட்டுள்ளார்கள்.

அதனால் உங்களில் ஒருவர் நோன்பிருந்தால் பொய் பேசுவதையும் வீண் விளையாட்டுக்களில் ஈடுபடுவதையும் வெட்ககரமான பேச்சுகளில் ஈடுபடுவதையும் தவிர்த்துக்கொள்ள வேண்டும்.

அதேநேரம் எவர் ரமழான் மாதத்தில் ஒருவருக்கு நோன்பு துறப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்கிறாரோ அதற்கு பகரமாக இறைவன் அவருடைய பாவங்களை மன்னித்து விடுகிறான், மேலும் அவரை நரக நெருப்பிலிருந்தும் பாதுகாக்கிறான். நோன்பு துறக்க ஏற்பாடு செய்பவருக்கு நோன்பாளிக்கு கிடைக்கப்பெறும் நற்கூலி கிடைக்கப்பெறும் என்றும் நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

இவ்வாறு ரமழான் நோன்பின் சிறப்பையும் மகத்துவத்தையும் நபி (ஸல்) அவர்கள் பல சந்தர்ப்பங்களில் எடுத்தியம்பியுள்ளார்கள். அதிலும் ரமழானின் இறுதிப் பத்து நாட்களும் மிகவும் சிறப்புக்குரியவை. அதனால் அந்த சிறப்புக்குரிய காலப்பகுதியை உச்சளவில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அது இறைவிசுவாசிகள் தறவிடக்கூடாத காலப்பகுதியாகும்.

கலாநிதி ஹாஜியானி தம்பிசாஹிப் சித்தி பரீதா

புத்தளம் வீதி, சிலாபம்

 

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT