261
தமிழ், சிங்கள புத்தாண்டு காலத்தை முன்னிட்டு கொழும்பு மற்றும் அதனை அண்டிய நகரங்களிலுள்ள மக்கள் தமது ஊர்களுக்கு சென்று வருவதற்கு வசதியாக விசேட பஸ், ரயில் சேவைகளை இலங்கை போக்குவரத்து சபையும் ரயில்வே திணைக்களமும் நடத்தவுள்ளன.
இந்நிலையில் தற்போது சேவையிலுள்ள பஸ்களுக்கு மேலதிகமாக 200 பஸ்கள் இன்று முதல் சேவையில் ஈடுபடுத்தப்படுவதாக, இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்தது.
அத்துடன் விசேட ரயில் சேவைகளை எதிர்வரும் 10ஆம் திகதி முதல் 15ஆம் திகதிவரை நடத்தவுள்ளதாக, ரயில்வே திணைக்களம் தெரிவித்தது.
கொழும்பிலிருந்து வெளிமாகாணங்களுக்கு இந்த ரயில் சேவைகள் இடம்பெறுமெனவும், அத்திணைக்களம் தெரிவித்தது.
லோரன்ஸ் செல்வநாயகம்