வற் வரி ஒழுங்கு விதிகள் ஊடாக மேலும் 145 பில்லியன் ரூபாவை அறவிடும் வகையில் அரசாங்கத்தினால் கொண்டுவரப்பட்ட பெறுமதி சேர் வரிச் சட்டத்தின் கீழான கட்டளை பாராளுமன்றத்தில் 36 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டது.
பாராளுமன்றத்தில் அது தொடர்பான விவாதம் இடம்பெற்று நிறைவடைந்ததையடுத்து பெறுமதி சேர் வரிச் சட்டத்தின் கீழான கட்டளையை நிறைவேற்ற எதிர்க்கட்சியின் பிரதம கொரடாவான லக்ஷ்மன் கிரியெல்ல எம்.பி வாக்கெடுப்பைக் கோரினார்.
அதனையடுத்து இடம்பெற்ற இலத்திரனியல் முறையிலான வாக்கெடுப்பில் பெறுமதி சேர் வரி சட்டத்தின் கீழான கட்டளைக்கு ஆதரவாக 55 வாக்குகளும் எதிராக 19 வாக்குகளும் அளிக்கப்பட்ட நிலையில் 36 மேலதிக வாக்குகளினால் அந்த கட்டளை சபையில் நிறைவேற்றப்பட்டது.
வாக்கெடுப்பில் சபைக்கு சமூகமளிக்காததால் 149 எம்.பி.க்கள் பங்கேற்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
லோரன்ஸ் செல்வநாயகம்