ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் அனுராதபுரம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எச். நந்தசேனவின் மறைவால் வெற்றிடமாகவுள்ள பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு, அடுத்த அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்ற வீரசேன கமகே நியமிக்கப்பட உள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அனுராதபுரம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான எச். நந்தசேன இன்று (04) காலை காலமானார்.
இதேவேளை எச்.நந்தசேனவின் மறைவுடன் வெற்றிடமாகவுள்ள அநுராதபுரம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கான விருப்பு பட்டியலில் அடுத்த இடத்தில் உள்ள வீரசேன கமகே சத்தியப்பிரமாணம் செய்ய உள்ளார்.
மேலும், நீண்ட காலம் வடமத்திய மாகாண சபையை பிரதிநிதித்துவப்படுத்திய வீரசேன கமகே, கைத்தொழில் அமைச்சராகவும், 7 தடவைகள் பதில் முதலமைச்சராகவும் பணியாற்றியுள்ளார்.