Thursday, April 25, 2024
Home » தனிப்பட்ட தரவுகளை அழிக்கிறது ‘கூகுள்’

தனிப்பட்ட தரவுகளை அழிக்கிறது ‘கூகுள்’

by mahesh
April 3, 2024 8:00 am 0 comment

இணையவாசிகள் ‘incognito’ சேவை வழி தனிப்பட்ட முறையில் இணையதளத்தை பயன்படுத்துபர்வகளை மறைமுகமாக கண்காணிக்கும் வழக்கு ஒன்றை தீர்க்கும் வகையில் பில்லியன் கணக்கான தரவு பதிவுகளை அழிப்பதற்கு கூகுள் இணங்கியுள்ளது.

அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ மத்திய நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் (01) முன்மொழியப்பட்ட நிபந்தனையில், கிரோம் புரோசரின் மறைமுகமான செயற்பாட்டின் மூலம் அதனை பயன்படுத்தும் மக்களுடன் தொடர்புபட்ட ‘பில்லியன் கணக்கான தரவுப் பதிவுகளை நீக்குவது அல்லது திருத்தம் செய்வதற்கு’ கூகுளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த வழக்கு 2020 இல் குறைந்தது 5 பில்லியன் டொலர் இழப்பிடு கோரி தொடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் வழக்கை தீர்ப்பதற்கு பணம் செலுத்தத் தேவையில்லை என்று குறிப்பிடப்பட்டபோதும் இது கிரோம் பயனர்கள் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாக கருதி கூகுள் மீது வழக்கு தொடுக்க வழி ஏற்பட்டுள்ளது.

இந்த தரவு அழிப்பு அமெரிக்காவுக்கு வெளியிலும் பொருந்து என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இணையவாசிகள் மூன்றாம் தரப்பு ‘கூகீஸ்’ அம்சத்தை 5 ஆண்டுகளுக்கு மறுக்க அனுமதிக்கப்படுவர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT