Friday, June 21, 2024
Home » தம்பலகாமம் பிரதேச செயலக இப்தார் நிகழ்வு

தம்பலகாமம் பிரதேச செயலக இப்தார் நிகழ்வு

by mahesh
April 3, 2024 10:50 am 0 comment

தம்பலகாமம் பிரதேச செயலகத்தின் இப்தார் நிகழ்வு நேற்று முன்தினம் திங்கட்கிழமை (01) மாலை அப்பிரதேச செயலக வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது.

சமய நல்லிணக்க விடயங்களை புரிந்துகொள்ளும் வகையிலும் இனங்களுக்கிடையில் சகவாழ்வு மற்றும் சகோதரதத்துவத்தை ஏற்படுத்தும் வகையிலும் தம்பலகாமம் பிரதேச செயலகத்தினுடைய இஸ்லாமிய நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் இப்தார் நிகழ்வு நடத்தப்பட்டது. இதன்போது நோன்பின் மகத்துவம் தொடர்பாக ஜம்மியத்துல் உலமா சபையின் தம்பலகாமம் பிரதேச தலைவர் மௌலவி குசைன் பயான் நிகழ்த்தினார்.

இதில் தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி, உதவி பிரதேச செயலாளர் இரா.பிரசாந்தன், பிரதி திட்டமிடல் பணிப்பாளர் ஐ.முஜீப், தம்பலகாமம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, சர்வமதத் தலைவர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்களாகிய பலரும் கலந்துகொண்டனர்.

தம்பலகாமம் குறூப் நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT