Monday, July 22, 2024
Home » இறக்காமத்தில் இளைஞர்களுக்கு தலைமைத்துவ பயிற்சிப்பட்டறை

இறக்காமத்தில் இளைஞர்களுக்கு தலைமைத்துவ பயிற்சிப்பட்டறை

by mahesh
April 3, 2024 10:40 am 0 comment

இறக்காமம் பிரதேச இளைஞர் சம்மேளனத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இளைஞர்களுக்கான தலைமைத்துவ பயிற்சிப்பட்டறையின் ஆரம்ப நிகழ்வு, இறக்காமம் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை (01) நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து அங்கு இப்தார் நிகழ்வும் நடைபெற்றது.

இளைஞர் சம்மேளனத் தலைவர் எஸ்.எம்.அஹமட் றிஜாஸின் தலைமையில் இளைஞர் சேவைகள் உத்தியோகத்தர் ஏ.ஆர்.றியாஸின் நெறிப்படுத்தலில் நடைபெற்ற இப்பயிற்சிப்பட்டறையில் இறக்காமம் ஜம்மியத்துல் உலமா கிளைத் தலைவர் மௌலவி எம்.எச்.வஹாப் வளவளாராக கலந்துகொண்டு உரையாற்றினார்.

இறக்காமம் பிரதேச செயலக உளவளத்துறை ஆலோசகர் ஏ.எச்.றகீப், இறக்காமம் பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி எம்.ஐ.ஜௌபர் உட்பட பிரமுகர்கள், இளைஞர் சம்மேளன உறுப்பினர்களாகிய பலரும் கலந்து கொண்டனர்.

அக்கரைப்பற்று வடக்கு தினகரன் நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT