Monday, April 22, 2024
Home » மதுரங்குளி ஆசிரியர் தொழிற்சங்க உறுப்பினரின் வீடு, சொத்துக்களுக்கு தீவைப்பு

மதுரங்குளி ஆசிரியர் தொழிற்சங்க உறுப்பினரின் வீடு, சொத்துக்களுக்கு தீவைப்பு

சந்தேக நபர்களை கைது செய்ய கோரி மக்கள் ஆர்ப்பாட்டம்

by mahesh
April 3, 2024 12:40 pm 0 comment

மதுரங்குளி – மூக்குத்தொடுவாய் பிரதேசத்தில் உள்ள இலங்கை ஆசிரியர் தொழிற் சங்க உறுப்பினர் ஒருவரின் வீடு மற்றும் அவரின் சொத்துக்களுக்கு தீ வைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்களை கைது செய்யுமாறு கோரி நேற்று (02) மதுரங்குளி-தொடுவா பிரதான வீதியை மறித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், மதுரங்குளி மூக்குத்தொடுவா பகுதியில் இயங்கி வரும் செமன் தொழிற்சாலையினால் தமது பிரதேசத்தில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதாக ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்தனர்.

குறித்த தொழிற்சாலையை சட்டரீதியான முறையில் முன்னெடுக்க வேண்டும் என இலங்கை ஆசிரியர் தொழிற் சங்க உறுப்பினர் தலைமையில் சிலர் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தனர். இந்த நிலையிலேயே, இலங்கை ஆசிரியர் தொழிற் சங்க உறுப்பினரின் வாகனம் உள்ளிட சொத்துக்கள் சிலரால் தீவைத்து எரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனை கண்டித்தும், சந்தேக நபர்களை கைது செய்ய கோரியும் மதுரங்குளி தொடுவா பிரதான வீதியை மறைத்து நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கோஷங்களை எழுப்பியும் சுலோகங்களை ஏந்தியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது மதுரங்குளி பொலிஸ் நிலையைப் பொறுப்பதிகாரி உட்பட பொலிஸார் சம்பவ இடத்திற்கு விஜயம் செய்து ஆர்ப்பாட்டக்காரர்களுடன் கலந்துரையாடினர்.

தீவைப்பு சம்பவத்துடன் தொடர்புடையவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் எனவும் , செமன் தொழிற்சாலையை நடத்த சட்டரீதியாக அனுமதி பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் பொலிஸாரிடம் தெரிவித்தனர்.

கற்பிட்டி தினகரன் விஷேட நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT