காசாவிலுள்ள சிறுவர்களின் நலன்புரி நடவடிக்கைகளுக்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிதியத்துக்கு 2 இலட்சத்து 25 ஆயிரம் ரூபாவை சாய்ந்தமருது அல்ஹிலால் வித்தியாலயம் நன்கொடையாக வழங்கியுள்ளது.
பாடசாலை அதிபர், உதவி அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களிடமிருந்து இதற்கான நிதி திரட்டப்பட்டதுடன், இந்த நிதியை வலய கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.சஹ்துல் நஜீமிடம் சாய்ந்தமருது அல்ஹிலால் பாடசாலை அதிபர் யூ.எல்.நஸார் நேற்று முன்தினம் திங்கட்கிழமை (01) கையளித்து வைத்தார்.
வலயக் கல்விப் பணிமனையில் வைத்து இந்த நிதி கையளித்து வைக்கப்பட்டதுடன், இதில் கணக்காளர் வை.ஹபீபுல்லாஹ், பாடசாலை பிரதி அதிபர் நுஸ்ரத்பேகம், உதவி அதிபர்களான ஜஹ்பர், றொஸான் டிப்றாஸ், யூ.எல்.லாபிர், ஏ.எல்.எம்.உவைஸ், ஆசிரியர் எம்.ஜாஸிர், அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.எம்.இல்யாஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
கல்முனை விசேட, சாய்ந்தமருது விசேட நிருபர்கள்