Saturday, May 25, 2024
Home » நிலையான சமூக உறவை கட்டியெழுப்ப அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும்

நிலையான சமூக உறவை கட்டியெழுப்ப அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும்

தென்கிழக்கு பல்கலை உபவேந்தர் றமீஸ் அபூபக்கர்

by mahesh
April 3, 2024 12:20 pm 0 comment

“நாட்டின் நிலையான அபிவிருத்திக்கும் சமூக உறவை கட்டியெழுப்புவதற்கும் நாம் எல்லோரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும்” என, தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர், பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் தெரிவித்தார்.

தென்கிழக்கு பல்கலைக்கழக சமூக நல்லிணக்க நிலையத்துடன் இணைந்து ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் பிரிட்டிஷ் கவுன்சில் மூலம் நடைமுறைப்படுத்தப்படும் மாற்றுவழி பிணக்கு தீர்வு தொடர்பான செயலமர்வில் கலந்துகொண்ட இளைஞர், யுவதிகளுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் சர்வமத கண்காட்சியும் ஒலுவில் விருந்தினர் விடுதியில் கடந்த ஞாயிறு (31) நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றிய போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய அவர்,

“எதிர்காலத்தில் பிரச்சினைகளை பேசித் தீர்க்கக்கூடிய நிலையான திட்டவரைபை சர்வமத குழுவினர் ஏற்படுத்த வேண்டுமென்பதுடன், அதனூடாக நிரந்தர சமாதானத்தை கட்டியெழுப்ப முடியும்.

சகல சமூகங்களும் சமாதானத்தையும் சகோதரத்துவத்தையும் விரும்புகின்றது. ஒவ்வொரு சமூகத்தவர்களும் பரஸ்பர புரிந்துணர்வுடன் செயற்பட வேண்டும். அப்போதே நாம் எதிர்பார்க்கின்ற நிலையான சமாதானத்தை அடைய முடியும்.

மத ஒற்றுமையையும் சமய சகவாழ்வையும் நம் தேசத்தில் கட்டியெழுப்புவதற்கு மூன்று இனங்களும் ஒற்றுமையாக வாழும் முன்மாதிரி பூமியாகிய அம்பாறை மாவட்ட மக்கள் பங்காளியாக இருப்பார்களென நம்புகிறேன்” என்றார்.

ஒலுவில் விசேட நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT