Friday, June 21, 2024
Home » மாவனல்லை மரண விசாரணை அதிகாரியாக நியமனம்

மாவனல்லை மரண விசாரணை அதிகாரியாக நியமனம்

by mahesh
April 3, 2024 11:20 am 0 comment

மாவனல்லையில் மரணவிசாரணை அதிகாரியாக கடுகண்ணாவையை பிறப்பிடமாகவும், மாவனல்லையை வசிப்பிடமாகவும் கொண்ட எம்.ஆர். முகம்மத் மசூர் நியமிக்கப்பட்டுள்ளார். மாவனல்லை நீதிமன்ற நீதவான் டப்ளியூ. ஏ.எஸ். அனுராத வீரக்கொடி முன்னிலையில் திடீர் மரண விசாரணை அதிகாரியாக இவர் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார்.

தனது ஆரம்பக் கல்வியை இலுக்குவத்தை முஸ்லிம் வித்தியாலயத்திலும், சாதாரண தர கல்வியை கண்டி புனித சில்வஸ்டர் கல்லூரியிலும் உயர்தர கல்வியை மாவனல்லை ஸாஹிரா தேசிய கல்லூரியிலும் பெற்ற இவர், தனது பட்டப்படிப்பையும், மொழிபெயர்ப்பாளர் கற்கை நெறியையும் பேராதனை பல்கலைக்கழகத்தில் கற்றுள்ளார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT