Saturday, May 25, 2024
Home » மூவின சமூக முக்கியஸ்தர்கள் பங்கேற்ற இன நல்லிணக்க இப்தார் நிகழ்வு
மாத்தளை மெர்க்ஸ் பௌண்டேஷன் ஏற்பாட்டில்...

மூவின சமூக முக்கியஸ்தர்கள் பங்கேற்ற இன நல்லிணக்க இப்தார் நிகழ்வு

by mahesh
April 3, 2024 11:00 am 0 comment

மாத்தளை, (MERCS) மெர்க்ஸ் பௌண்டேஷன் ஏற்பாட்டில் விசேட இப்தார் நிகழ்வு மாத்தளை ரைஸ்டார் ரீஜென்ஸ்சி திருமண மண்டபத்தில் அண்மையில் சிறப்பாக இடம்பெற்றது. இனங்களுக்கிடையே இன நல்லிணக்கம் புரிந்துணர்வை வலுப்படுத்தும் நோக்கில் சமூக நல்லிணக்கம் என்ற தொனிப்பொருளில் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டமை விசேட அம்சமாகும்.

மாத்தளை சர்வதேச ரோயல் ஆங்கிலக் கல்லூரியின் அதிபரும் மேற்படி அமைப்பின் தலைவருமான தேசமானிய கலாநிதி எம்.எம். ஹனீபா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மாத்தளை மாவட்ட செயலாளர் தேஜானி திலகரத்ன, மாத்தளை பிரதேச சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ரோஹன வலிகசேகர, மாவட்ட மேலதிக ெசயலாளர் திருமதி ரியால்தீன், மாத்தளை மாநகர சபை ஆணையாளர் நிஷந்த மாதுகே, மத்திய மாகாண சபை முன்னாள் உறுப்பினர் எம். சிவஞானம், மாத்தளை பௌத்த மந்திரத்தின் தலைவர் இசுறு ஜயவர்தன ஆகியோர் விசேட விருந்தினராக கலந்து கொண்டு இங்கு நல்லிணக்கம் தொடர்பாகவும் உரையாற்றினர்.

மேலும், மாத்தளை வைத்தியசாலை வைத்தியர்கள் மற்றும் பௌத்த, இந்து, கத்தோலிக்க ஆலயங்களிலுள்ள தர்மகர்த்தாக்கள், பள்ளிவாசல் நிர்வாகிகள், மௌலவிமார்கள், மாத்தளை கல்வி வலய அதிகாரிகள், பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், வர்த்தக பிரமுகர்கள், புத்திஜீவிகள் பலரும் இதில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இதில் விசேட சொற்பொழிவை மௌலவி லிஸான் ரம்ஸிலும் நன்றியுரையை அமைப்பின் செயலாளர் எம்.எஸ். ஸுல்பிகார் ஆகியோர் நிகழ்த்தினர்.கல்வி, கலாசாரம், சமயம், சுகாதாரம் சமூக மற்றும் மத நல்லிணக்கம் கொண்ட அமைப்பாக (MERCS) மெர்க்ஸ் பௌண்டேஷன் மாத்தளையில் இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

tkn-04-03-pg09-R1

(படமும் தகவலும்: எம்.சதூர்தீன் (JP), மாத்தளை சுழற்சி நிருபர்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT