எதிர்காலத் தலைமுறைகளின் அபிலாஷைகளையும், கனவுகளையும் வளமாக்கும் வகையில், செல்வாக்குச் செலுத்தும் பெண்களின் முக்கியத்துவம் தொடர்பில் முக்கியமான கலந்துரையாடலொன்றை முன்னெடுப்பதற்காக பல்வேறுபட்ட பின்னணிகளைக் கொண்ட, மதிப்பிற்குரிய குழுவினர் ஒன்றுகூடியுள்ளனர். இலங்கையில் பொதுத் துறையில் முன்னணி பெண் பிரபலங்களின் போற்றத்தக்க சாதனைகளை அங்கீகரித்து, கொண்டாட வேண்டி முக்கிய தேவையை வலியுறுத்தும் ஒரு மேடையாக இக்குழு கலந்துரையாடல் நிகழ்வு இடம்பெற்றது.
ஓய்வுபெற்ற பதில் பிரதம நீதியரசர் ஷிராணி திலகவர்த்தன,முன்னாள் வீடமைப்பு அமைச்சர் பேரியல் அஷ்ரப் ,பாலின மற்றும் குடும்ப சட்டச் செயற்பாட்டாளர், விரிவுரையாளர் சட்டத்தரணி ஜெருஷா குரொஸ்டி-தம்பையா, மற்றும் சிறுவர் மற்றும் கட்டிளமைப் பருவ உளவியல் நிபுணர் கலாநிதி கிஸேல் தாஸ், ஆகிய முன்னணி பிரபலங்கள் இக்கலந்துரையாடல் குழுவில் இடம்பெற்றதுடன், Independent Collective Schooஅதிபர் மற்றும் இணை ஸ்தாபகர் lயசோதரா பதாஞ்சலி, நிகழ்வை நெறியாள்கை செய்தார். இளம் பெண் பிள்ளைகளை ஊக்கப்படுத்தி, அதிகாரமளிப்பதில் வலுவான பெண் பிரபலங்களின் வகிபாகத்தின் முக்கியத்துவம் தொடர்பில் தமது சுயாதீன அபிப்பிராயங்களை குழுவினர் பகிர்ந்துகொண்டனர். கலாச்சார ரீதியாகவும், சமூகரீதியாகவும் பெண்களின் பல்வேறுபட்ட வகிபாகங்கள் தொடர்பான தமது தனிப்பட்ட கருத்துக்களை அவர்கள் இந்த உரையாடல் மூலமாக வெளிப்படுத்தியதுடன், இலங்கையில் பெண்களின் பங்களிப்புக்களை அங்கீகரித்து, அவற்றைப் பாராட்டவேண்டியமை தொடர்பான மூலோபாயங்களையும் அவர்கள் பகிர்ந்துகொண்டனர்.
குழுநிலை கலந்துரையாடலின் நிறைவில் யூனிலீவர் ஸ்ரீலங்கா நிறுவனத்தின் அழகு, உடல்நலம் மற்றும் தனிப்பட்ட பராமரிப்பு உற்பத்திகளுக்கான சந்தைப்படுத்தல் பணிப்பாளரான ஷமாரா சில்வா தனது நன்றிகளை வெளிப்படுத்தி, உரையாற்றுகையில், “அவர்களது உள்ளத்து உணர்வுகள் மூலமாக வெளிவந்த ஆழமான விடயங்கள், இந்த முயற்சியின் மூலமாக லைவ்போய் அடைந்துகொள்ள விரும்புகின்ற நோக்கங்களின் பிரதிபலிப்பை தூண்டுபவையாக அமைந்துள்ளன.