Thursday, April 25, 2024
Home » செலிங்கோ லைஃப் 18ஆவது ஆண்டாகவும் இலங்கையின் மிகவும் பிரபலமான ஆயுள் காப்புறுதி நிறுவனமாக முடிசூட்டப்பட்டது

செலிங்கோ லைஃப் 18ஆவது ஆண்டாகவும் இலங்கையின் மிகவும் பிரபலமான ஆயுள் காப்புறுதி நிறுவனமாக முடிசூட்டப்பட்டது

by mahesh
April 3, 2024 8:00 am 0 comment

செலிங்கோ லைஃப் 18ஆவது ஆண்டாக இலங்கையின் மிகவும் பிரபலமான ஆயுள் காப்புறுதி நிறுவனமாக முடிசூட்டப்பட்டது. 2024 மார்ச் 19 ஆம் திகதி இலங்கை சந்தைப்படுத்தல் நிறுவகத்தினால் (SLIM) நடாத்தப்பட்ட SLIM Kantar மக்கள் வருது வழங்கும் விழாவில் இந்த விருது வழங்கப்பட்டது.

இந்த விருது செலிங்கோ லைஃப் நிறுவனத்திற்கு அண்மையில் வழங்கப்பட்டது. செலிங்கோ லைஃப்பின் பிரபல்யத்தினை வலியுறுத்தும் இந்த விருது 2023 ஆம் ஆண்டிற்கான நிறுவனத்தின் நிதி பெறுபேறுகளின் அறிவிப்புடன் அதை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. ஆயுள் காப்புறுதித் துறையில் சந்தை தலைவனாக தொடர்ந்து 20 ஆவது ஆண்டாக SLIM Kantar விருதினை பெற்று அதன் மேலாதிக்க தன்மையை உறுதிப்படுத்தியுள்ளது.

இந்த விருதானது நடுவர் குழுவிற்குப் பதிலாக நுகர்வோர் விருப்பங்களை அடிப்படையாகக் கொண்ட ஒரு கருத்துக்கணிப்பின் முடிவுகளால், தீர்மானிக்கப்படுவதால் இது மக்கள் உணர்வின் உண்மையான பிரதிபலிப்பாக அமைகிறது. ஆயுள் காப்புறுதி துறை விருதுகள் தொடங்கப்பட்டதில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் விருதை வென்றுள்ள இலங்கையின் ஒரே நிறுவனமாக செலிங்கோ லைஃப் தனித்து நிற்கிறது.

இந்த விருது குறித்து கருத்து தெரிவித்த செலிங்கோ லைஃப் நிறுவனத்தின் பிரதி பிரதான செயற்பாட்டு அதிகாரி திரு.சமிதா ஹேமச்சந்திர, ‘வாடிக்கையாளர் உணர்வு மிக முக்கியமான அம்சமாகும் எந்தவொரு வணிகத்தின் வெற்றியிலும் மக்களின் விருப்பமாக இருக்க வேண்டும். தொடர்ந்து 18 வருடங்கள் அந்த சாதனையை தக்கவைத்துக் கொள்ளுவது ஒரு சாதனையாகும். எதிர்பார்ப்புகளை விட அதன் பொறுப்புகளை நிறைவேற்றியுள்ளது. எங்களின் இரண்டு தசாப்த சந்தை தலைமைத்துவம் என்பது எங்கள் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டது. அதில் செலிங்கோ லைஃப் மக்கள் விருதை வென்றுள்ளது என்பது மகிழ்ச்சியளிக்கிறது. இந்த விருது செலிங்கோ லைஃப் எதிர்பார்ப்புகளை விட அதிகமாக உள்ளது என்பதை உறுதிப்படுத்துகிறது. அதன் வாடிக்கையாளர்கள் மற்றும் சமூகம், முன்னெடுப்புக்களால் உத்வேகமாக செயற்படும் ஒரு நிறுவனமாக பார்க்கப்படுகிறது என்று குறிப்பிட்டார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT