Thursday, April 25, 2024
Home » மகத்தான வெற்றியுடன் 2023 ஆம் ஆண்டை நிறைவு செய்துள்ள மக்கள் வங்கி

மகத்தான வெற்றியுடன் 2023 ஆம் ஆண்டை நிறைவு செய்துள்ள மக்கள் வங்கி

by mahesh
April 3, 2024 6:00 am 0 comment

வங்கியின் தனித்த வருமானங்களில் சுமார் 50 வீதம் கடந்த காலாண்டில் ஈட்டப்பட்டுள்ளமை வலுவான வளர்ச்சி வேகத்தைப் பிரதிபலிக்கின்றது. கணப்படுகின்றது. 2023 மார்ச் 31 இல் முடிவடைந்த ஆண்டுக்கான பெறுபேறுகளை மக்கள் வங்கி இன்று அறிவித்துள்ளதுடன், ரூபா 96.8 பில்லியன் மற்றும் ரூபா 19.3 பில்லியன் தொகைகளை முறையே மொத்த திரட்டிய செயல்பாட்டு வருமானம் மற்றும் வரிக்கும் முந்தைய இலாபமாக பதிவு செய்துள்ளது.

2022 மற்றும் 2023 இன் ஆரம்பத்தில் காணப்பட்ட உயர் வட்டி வீத சூழ்நிலை காரணமாக கால வைப்பு நிதிக்கான உயர் வட்டிச் செலவுகள் மற்றும் நாட்டின் நன்மையைக் கருத்தில் கொண்டு வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்ட கணிசமான வட்டிச் சலுகைகள் ஆகியவற்றின் பிரதிபலிப்பாக தேறிய வட்டி வருமானமானது முந்தைய ஆண்டில் பதிவாக்கப்பட்ட ரூபா 91.0 பில்லியன் தொகையிலிருந்து வீழ்ச்சி கண்டு, இந்த ஆண்டில் ரூபா 67.8 பில்லியனாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. எனினும் இந்த ஆண்டின் கடைசி காலாண்டில் மேல்நோக்கிய வளர்ச்சி காணப்பட்டதுடன், தற்போதைய வட்டி வீத சூழலில் அதன் வட்டிச் செலவு தொடர்ந்தும் கட்டுப்படுத்தப்பட்டு வருகின்றது. திரட்டிய தேறிய கட்டணங்கள் மற்றும் தரகுப்பண வருமானம், 2022 ஆம் ஆண்டில் இடம்பெற்ற வழமைக்கு மாறான வருமானங்கள் நீங்கலாக, 11.0 வீத வளர்ச்சியைப் பிரதிபலித்து, ரூபா 13.9 பில்லியனாக பதிவாக்கப்பட்டுள்ளது.

பணவீக்கத்தினால் எழுந்த செலவு அழுத்தங்களுக்கு மத்தியிலும், மொத்த திரட்டிய செயல்பாட்டு செலவுகள் 5.5 வீதத்தினால் மாத்திரம் அதிகரித்து, ரூபா 62.2 பில்லியனை எட்டியுள்ளதுடன் (2022 இல் ரூபா 59.0 பில்லியன்), ஏனைய வங்கிகளுடன் ஒப்பிடுகையில், கடுமையான செலவுக் கட்டுப்பாட்டு மற்றும் திறன் மேம்பாடுகளை பிரதிபலித்துள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT