Wednesday, November 13, 2024
Home » யாழ். புறநகர் பகுதியில் வாள்வெட்டு அடிதடி; 22 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதி

யாழ். புறநகர் பகுதியில் வாள்வெட்டு அடிதடி; 22 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதி

by mahesh
April 3, 2024 9:00 am 0 comment

யாழ்ப்பாணம் புறநகர் பகுதியில் வன்முறை கும்பல்களுக்கிடையில் இடம்பெற்ற வாள்வெட்டு மற்றும் அடிதடி மோதலில், 22 பேர் காயமடைந்து யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

தாக்குதல்களுக்கிலக்காகி காயங்களுடன் திடீரென 22 பேர் வைத்தியசலையில் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு சில மணி நேரங்களுக்குள் அனுமதிக்கப்பட்டதால், வைத்தியர்கள், தாதியர்கள், சிற்றூழியர்கள் பெரும் சிரமத்தையும், நெருக்கடிகளையும எதிர்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. அதேவேளை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்கள் , அவர்களுடன் உதவிக்கு வந்தவர்கள் எனப் பலரும் வைத்தியசாலையினுள் வந்ததால் அங்கும் சற்று மோதல் போக்கு காணப்பட்டதுடன் , மோதலில் ஈடுபடவும் சிலர் முயன்றனர்.

சம்பவம் தொடர்பில் யாழ். பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதால், பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

(யாழ்.விசேட நிருபர்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT