Monday, April 22, 2024
Home » விசாயின்றி நாட்டுக்கு வரும் அனுமதி நீடிப்பு

விசாயின்றி நாட்டுக்கு வரும் அனுமதி நீடிப்பு

by mahesh
April 3, 2024 8:30 am 0 comment

இந்தியா, சீனா மற்றும் ரஷ்யா உள்ளிட்ட ஏழு நாடுகளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் விசா கட்டணமின்றி நாட்டுக்குள் நுழைய அனுமதிக்கப்படுவர்.இதற்கான முன்னோடித் திட்டம் 2024 ஏப்ரல் 30 வரை நீடிக்கப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இந்த முன்னோடித் திட்டத்தின் இறுதி முடிவு அடுத்த சில வாரங்களில் எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

கடந்த வருடம் அக்டோபரில், இந்தியா, சீனா, ரஷ்யா, மலேசியா, ஜப்பான், இந்தோனேசியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளிலிருந்து வருபவர்கள் மார்ச் 31 வரை விசா கட்டணமி ன்றி,நாட்டுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த முன்னோடி திட்டத்துக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT