Thursday, April 25, 2024
Home » சர்வதேசத்தின் முறைமைக்கமைய வங்கிக் கட்டமைப்புக்கள் புதுப்பிப்பு
வங்கி திருத்த சட்டமூலம் சமர்ப்பிப்பு

சர்வதேசத்தின் முறைமைக்கமைய வங்கிக் கட்டமைப்புக்கள் புதுப்பிப்பு

by mahesh
April 3, 2024 7:00 am 0 comment

நாட்டின் வங்கி கட்டமைப்பை சர்வதேசத்தின் முறைமைக்கு இணங்க புதுப்பிக்கும் நோக்கிலேயே வங்கி திருத்த சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய சபையில் தெரிவித்தார்.

18 வருடங்களுக்குப் பின் மேற்கொள்ளப்படும் இத்திருத்தங்கள் மூலம் நாட்டின் ஐந்து கோடியே 70 லட்சம் வங்கி வாடிக்கையாளர்கள் பாதுகாக்கப்படுவதுடன், இதன் கீழ் குறிப்பாக புதிய வங்கி அனுமதிப்பத்திரத்தை பெற்றுக் கொள்வதற்கு சட்டத்திருத்தம் இடம்பெறுவதாகவும் அவர் சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று மேற்படி சட்டமூலத்தை சமர்ப்பித்து உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். வங்கிகளின் பங்குதாரர்களான உரிமையாளர்களின் தகைமைகளை புதுப்பித்தல், உரிமைத்தன்மை தொடர்பில் சட்ட நியதிகளை திருத்துதல், இலாபத்தை நிர்ணயகப்பதற்கு முன்பதாக சொத்துக்கள் தொடர்பாக கவனம் செலுத்துதல் உள்ளிட்ட விடயங்கள் இந்த சட்டமூலத்தில் உள்வாங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

24 வர்த்தக வங்கிகள் ஆறு விசேட வங்கிகள் இலங்கையில் தற்போது செயல்படும் நிலையில் அவற்றின் சொத்துக்களின் பெறுமதி 20.4 ட்ரில்லியன் ரூபாவாக உள்ளது . அவற்றில் 16. 6 ட்ரில்லியன் வைப்பிலிடப்பட்டுள்ளன.

அந்த வகையில் ஐந்து கோடியே எழுபது இலட்சம் வாடிக்கையாளர்களில் 60 வீதமானவர்கள் ஐயாயிரத்துக்கும் குறைவான வைப்பைக் கொண்டுள்ளவர்களே என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

லோரன்ஸ் செல்வநாயகம்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT