Thursday, April 25, 2024
Home » அதிவேக நெடுஞ்சாலைகள் எதுவும் தனியாருக்கு வழங்கப்படவில்லை

அதிவேக நெடுஞ்சாலைகள் எதுவும் தனியாருக்கு வழங்கப்படவில்லை

செய்திகளில் எதுவித உண்மையுமில்லை

by mahesh
April 3, 2024 6:30 am 0 comment

அதிவேக நெடுஞ்சாலைகள் எதுவும் தனியாருக்கு வழங்கப்படவில்லை. இது தொடர்பிலான செய்திகள் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானதென அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (02) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில், அதிவேக நெடுஞ்சாலை தனியார் நிறுவனம் ஒன்றுக்கு வழங்கப்படுமா?

என ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு கூறினார்.

இந்த நிறுவனம், தனியார் மயமாக்கப்படமாட்டாதென தெரிவித்த அமைச்சர், தேவையான நிர்வாக முறைகளை மாத்திரம் மாற்றியமைத்து வினைத்திறனுடன் செயற்படுத்தவுள்ளதாக தெரிவித்தார்.

சஹன்யா இன்வெஸ்ட்மென்ட் நிறுவனம் முற்றிலும் அரசாங்கத்துக்குச் சொந்தமான நிறுவனம். இது திறைசேரி மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமானது என்றும் அவர் கூறினார்.

வீதி அபிவிருத்தி அதிகார சபையின் செயற்பாட்டுப் பணிப்பாளர் P.M.H. Kandambi. யை பிரதம நிறைவேற்று அதிகாரியாக இவ்வாரம் நியமிக்கவுள்ளேன். நியமனத்தின் போது, நிறுவனம் செயல்முறை போன்றவற்றை அவர் தெளிவுபடுத்துவார்.

இவை இலாபமீட்டும் நிறுவனங்கள் அல்ல. பெரும் கடனை எவ்வாறு செலுத்துவது என்பதில் பெரும் நெருக்கடியில் உள்ள நிறுவனம்.இதனால் இலங்கையின் ஆற்றல் வணிகமயமாக்கப்படும் வரை பாதுகாக்கப்பட வேண்டிய நிறுவனங்களின் பட்டியலில் பெற்றோலியக் கூட்டுத்தாபனம், இலங்கை மின்சார சபை, ஸ்ரீலங்கன் நிறுவனம், மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபை என்பன இடம்பெற்றுள்ளன. அவை மேம்பட்ட நிறுவனங்கள் அல்ல. அவை பெரும் நெருக்கடியில் ஒன்றிணைந்து பெரும் நெருக்கடியை உருவாக்குகின்றன. நெருக்கடிகளில் இருந்து மீண்டுவர தொழில்நுட்ப மற்றும் முகாமைத்துவ மூலோபாய முறைகள் பயன்படுத்தப்பட வேண்டும். ஆனால் தனியார் மயப்படுத்தப்பட மாட்டாது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT