இலங்கை பொலிஸ் திணைக்களத்தில் ஆட்சேர்ப்புக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. மலையக பகுதியில் தமிழ் மொழியில் சேவையாற்றுவதற்கு அதிக வெற்றிடம் நிலவுவதால், இதற்குத் தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்க முடியுமென பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகருமான வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.
இலங்கை பொலிஸ் திணைக்களத்தில் ஆட்சேர்ப்புக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. மலையகத்தை பொறுத்தமட்டில் பல இளைஞர், யுவதிகள் விண்ணப்பிக்க தகுதியுடையவர்களாகவும் காணப்படுகின்றனர் . அது மட்டுமன்றி மலையக பொலிஸ் நிலையங்களிலேயே அதிகளவில் வெற்றிடங்களும் காணப்படுகின்றன.
ஆகவே, நேரத்தை வீணடிக்காமல் உடனடியாக விண்ணப்பிக்குமாறு அனைவரையும் கேட்டுக் கொள்வதோடு தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு மலையக பொலிஸ் நிலையங்களிலேயே நியமனம் பெற்றுத்தர நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென்றும் அவர் தெரிவித்தார்.