Monday, April 22, 2024
Home » இம்ரான் கானின் சிறை தண்டனை இடைநிறுத்தம்

இம்ரான் கானின் சிறை தண்டனை இடைநிறுத்தம்

by sachintha
April 2, 2024 9:38 am 0 comment

அரச பரிசுகளை சட்டவிரோதமாக விற்றதுடன் தொடர்புபட்ட வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீது விதிக்கப்பட்ட சிறைத் தண்டனையை அந்நாட்டு நீதிமன்றம் ஒன்று இடைநிறுத்தியுள்ளது.

இந்த வழக்கில் கடந்த ஜனவரி மாதம் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பிபி இருவருக்கும் தலா 14 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. அந்தத் தீர்ப்பில் இருவரும் அரச பதவிகளுக்கு போட்டியிடுவதற்கு 10 ஆண்டுகள் தடையும் பாகிஸ்தான் நாணயப்படி தலா 787 மில்லியன் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டிருந்தது.

அரச இரகசியங்களை வெளியிட்டதற்காக இம்ரான் கானுக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு ஒருநாள் கழித்து கடந்த ஜனவரி 31 ஆம் திகதியே இம்ரான் கானுக்கு இந்த சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. பல்வேறு குற்றச்சாட்டுகளில் இம்ரான் கான் கடந்த ஓகஸ்ட் மாதம் தொடக்கம் சிறை அனுபவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம் நேற்று இந்த வழக்கில் வழக்கப்பட்ட தண்டனையை இடைநிறுத்தியது. தண்டனைக்கு எதிரான மேன்முறையீடு தொடர்பான விசாரணை நோன்புப் பெருநாள் விடுமுறைக்குப் பின்னர் எடுத்துக்கொள்ளப்படும் என்று தலைமை நீதியரசர் ஆமிர் பாரூக் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT