அரபுக் கடலில் கடற்கொள்ளையர்களின் தாக்குதலுக்கு இலக்கான ஈரானிய மீன்பிடிக் கப்பலையும் அதிலிருந்த 23 பாகிஸ்தான் பிரஜைகளையும் இந்தியக் கடற்படை பாதுகாப்பாக மீட்டுள்ளது.
கடற்கொள்ளையர்களின் நடவடிக்கைகளுக்கு இந்தியக் கடற்படையினர் 12 மணித்தியாலயங்களுக்கு மேலாக பதில் மூலோபாய நடவடிக்கைகளை முன்னெடுத்து ஈரானிய மீன்பிடிக் கப்பலையும் பாகிஸ்தான் பிரஜைகளையும் மீட்டதாக இந்திய கடற்படை தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் இந்திய கடற்படையினர் விடுத்துள்ள அறிக்கையில், 12 மணித்தியாலயங்களுக்கும் மேலாக மேற்கொள்ளப்பட்ட தந்திரோபாய நடவடிக்கைகளைத் தொடர்ந்து மீன்பிடிக் கப்பலில் ஏறி இருந்த கடற்கொள்ளையர்கள் சரணடைந்ததோடு மீன்பிடிக் கப்பலும் பாகிஸ்தானிய பிரஜைகளும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.