164
அரக்க குண
இருளை அகற்றி
அன்பெனும் ஒளியை
ஏற்றி வைத்த
இயேசு பிரான்
உயிர்த்து எழுந்தாரே!
போர் கொண்ட
பூமியில் பூமழை
பொழிய செய்து
அமைதியை நிலை
நாட்டிய இரட்சிப்பு
எழுந்ததே மீண்டு!
நம் பாவங்களை
தன் குருதியால்
கழுவி சுத்தம்
செய்த செம்மல்
புழுதி நீக்கி
புத்துயிர் பெற்றாரே!
சிலுவையில்
அறைந்தோருக்கும்
கூர் ஈட்டி
கொண்டு
குத்தியோருக்கும்
மாறாக அன்பும்
ஆசியும் வழங்கிய
வள்ளல்
உயிர்த்தாரே!
நவீன்