Home » கிண்ணியா கரையோர அபிவிருத்தி பணிகள் தொடர்பில் ஆராய்வு

கிண்ணியா கரையோர அபிவிருத்தி பணிகள் தொடர்பில் ஆராய்வு

by sachintha
April 2, 2024 8:53 am 0 comment

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானினால் கிண்ணியா உப்பாறு தொடக்கம் கங்கை வரையிலான கரையோரப் பகுதியில் கரையோர நடைபாதை (Beach Walking Path – Kinniya) அமைப்பதற்கும் அதனுடன் இணைந்து அப்பிரதேச சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

இதுதொடர்பில் ஆராய்வதற்கு கிழக்கு ஆளுநர் மற்றும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ் தௌபீக் உள்ளிட்ட குழுவினர் நேற்றுமுன்தினம் அப்பிரதேசங்களுக்கு விஜயம் செய்தனர்.

இதன்போது இத்திட்டம் தொடர்பாக முழுமையாக ஆராயப்பட்டதுடன், விரைவில் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் தீர்மானிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கிண்ணியா பிரதேச செயலாளர் முகம்மது கனி, திட்டமிடல் பணிப்பாளர் பாயிஸ், காணிச் சீர்திருத்த ஆணைக்குழுவின் கிழக்கு மாகாண பணிப்பாளர் விமல்ராஜ், காணி உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.

(கிண்ணியா மத்திய நிருபர்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT