பாதுகாப்பு அமைச்சின் கண்காணிப்பில் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் உதவியுடன் வில்கமுவ நாமினி ஓயா ஸ்ரீமத் மொன்டி கொபல்லாவ மாதிரி ஆரம்ப வித்தியாலயத்தின் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட 2மாடி கட்டடத்தின் திறப்பு விழா நேற்று முன்தினம் இடம்பெற்றது . இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கலந்து கொண்ட பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் பேன்ட் வாத்தியத்துடன் மாணவர்களால் அழைத்து வரப்படுவதையும் புதிய கட்டடத்தை இராஜாங்க அமைச்சர் வைபவ ரீதியாக திறந்து வைப்பதையும் மற்றும் இந்நிகழ்வில் மத்திய மாகாண கல்வித் திணைக்களத்தின் செயலாளர் , சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் அதிகாரிகள், பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் பலரும் கலந்து கொண்டுள்ளதை படத்தில் காணலாம்.
மாத்தளை சுழற்சி நிருபர்