Thursday, April 25, 2024
Home » ஊவா தொழில் முயற்சியாளர்களின் ஆற்றலை மேம்படுத்தும் செயலமர்வு

ஊவா தொழில் முயற்சியாளர்களின் ஆற்றலை மேம்படுத்தும் செயலமர்வு

by sachintha
April 2, 2024 8:23 am 0 comment

ஊவா மாகாணத்தில் உள்ள சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களின் வியாபார அறிவு, திறன்கள் மற்றும் மனோபாவங்களை மேம்படுத்துவதற்கான செயலமர்வு ஊவா மாகாண சபையின் கேட்போர் கூடத்தில் அண்மையில் ஊவா மாகாண பிரதம செயலாளர் திருமதி தமயந்தி பரணகம தலைமையில் நடைபெற்றது.

வியாபார அறிவு, திறன்கள் மற்றும் மனோபாவங்களை மேம்படுத்துவது குறித்து ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி எச்.எல். திரு. நீல் வசந்த உரையாற்றினார். இச்செயலமர்வில் வியாபார நடவடிக்கை, விளம்பர உக்திகள்,எவ்வாறு வாடிக்கையாளர்களை கவர்வது, வியாபார ஸ்தாபனங்களை பதிவு செய்தல், வங்கி நடவடிக்கை, கடன் வசதிகளைப் பெறல் போன்ற பல்வேறு வியாபார விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.

பிராந்திய வங்கி முகாமையாளர்கள், மாகாண அதிகாரிகள் மற்றும் ஊவா மாகாணத்தின் சுமார் 300 சிறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர் இந்தச் செயலமர்வில் பங்குபற்றினர். ஊவா மாகாண பிரதி பிரதம செயலாளர் (நிரல்) வீரசிங்க உள்ளிட்ட அதிகாரிகள் இச்செயலமர்வை ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

எம்.ஏ.எம்.ஹசனார்…

(ஊவா சுழற்சி நிருபர்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT