ஹோமாகம சாசனஆரக்ச பலமண்டலவின் அறநெறி பாடசாலை ஆசிரியர்களின் சேவையை பாராட்டும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வு, மாஹரகம தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் கேட்போர் கூடத்தில் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் வேந்தர் சங்கைக்குரிய இத்தேபானே தம்மாலங்கார தேரர் மற்றும் போக்குவரத்து பெருந்தெருக்கள், வெகுஜன ஊடக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன உள்ளிட்டவர்களின் பங்களிப்புடன் இடம்பெற்றது.இங்கு உரையாற்றிய அமைச்சர்:
நாட்டின் எதிர்காலத்தை பொறுப்பேற்கவுள்ள இளம் சமூகத்தினரை சட்டத்தை மதிக்கும் சமூகமாக மேம்படுத்துவது எவ்வாறு என்பதே தற்போதுள்ள கேள்வியாக இருப்பதாக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன இதன் போது தெரிவித்தார். உலகில் ஏற்பட்டு வரும் தொழில்நுட்பப் புரட்சியால், இளம் சமூகத்தினர் சரியான பாதைக்கு அழைத்துச் செல்வதை விட வேகமாக தவறான பாதைகளுக்கு இட்டுச் செல்லப்படுகின்றனர்.
இன்று பெரும்பாலான இளம் சமூகத்தினர் பெற்றோர், ஆசிரியர்கள், பெரியவர்கள், மதத் தலைவர்களை மதிப்பதில்லை. நீண்ட கல்விப் பயணத்தின் பின் திறமையானவர்களாக மாறி பல்கலைக்கழகங்களுக்கு தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்கள், அங்கு காணப்படும் ஒரு சிலரின் செயல்பாட்டால் நற்பண்புகளை சீரழிக்கின்றனர்.இந்நிலைகளிலிருந்து இளம் சமூகத்தினரைப் பாதுகாக்க அறநெறிக் கல்வி உதவும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
கொழும்பு மாவட்ட செயலாளர் கே.ஜி. விஜேசிறி பௌத்த அலுவல்கள் ஆணையாளர், ஹோமாகம வலய தம்ம பாடசாலை அதிபர்கள், தம்ம பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.