2024 வாக்காளர் பட்டியலின்படி வாக்களிப்பு
ஜனாதிபதி தேர்தல் குறித்த உத்தியோகபூர்வ அறிவிப்பு எதிர்வரும் ஜூலை மாத இறுதியில் அல்லது ஆகஸ்ட் மாத ஆரம்பத்தில் வெளியாகும் என, தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ஜனாதிபதி தேர்தல், செப்டெம்பர் 17 க்கும் ஒக்டோபர் 17 க்கும் இடைப்பட்ட காலத்தில் கட்டாயம் நடத்தப்படும் எனவும் ஆணைக்குழுவின் தலைவர் ரத்நாயக்க குறிப்பிட்டார்.
தற்போது நடைமுறையிலுள்ள தேர்தல் சட்டத்தின் கீழேதான், ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும் எனவும் அவர் தெரிவித்தார். இதுபற்றி மேலும் தெரிவித்த அவர்;2024 வாக்காளர் பட்டியலின் பிரகாரம் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும். இது தொடர்பான வாக்காளர் பட்டியலை தயாரிக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. ஜூலை மாதத்தில் வாக்காளர் பதிவு நடவடிக்கைகளை நிறைவு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.