Thursday, April 25, 2024
Home » ஜனாதிபதியை தீர்மானிக்கும் அளவுக்கு தமிழரசுக் கட்சியை பலப்படுத்த வேண்டும்

ஜனாதிபதியை தீர்மானிக்கும் அளவுக்கு தமிழரசுக் கட்சியை பலப்படுத்த வேண்டும்

தந்தை செல்வாவின் ஜனன தின நிகழ்வில் சாணக்கியன் எம்.பி

by sachintha
April 2, 2024 6:30 am 0 comment

தமிழரசு கட்சியின் ஆதரவின்றி எவரும் ஜனாதிபதியாக வரமுடியாதளவிற்கு தமிழரசு கட்சியை பலப்படுத்திக் கொள்வதே, தற்போதுள்ள பொறுப்பென, பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். தந்தை செல்வாவின் 126 ஜனன தினத்தையிட்டு (31) தமிழரசுக் கட்சி ஏற்பாட்டில் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு மட்டக்களப்பில் தந்தை செல்வா பூங்காவில் இடம்பெற்றது. அவரது திரு உருவச்சிலைக்கு அஞ்சலி செலுத்திய பின்னர் உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.இங்கு பேசிய சாணக்கியன் எம்.பி கூறியதாவது:

இவ்வருடம் இரண்டு தேர்தல்கள் வருவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. இதில் எந்த தேர்தல் முதல்வரும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு மட்டுமே தெரியும்.

மக்களையும் மண்ணையும் பாதுகாக்கும் வகையில் நாம், செயற்பட வேண்டும். எமக்கு எதிரான செயற்பாடுகள் இடம்பெறாது பாதுகாப்பது எமது பொறுப்பு.தந்தை செல்வா இவற்றையே எமக்கு அரசியலில் போதித்தார்.

தமிழ் மக்களுக்காக 75 வருடங்களுக்கு மேலா க குரல் கொடுத்து வருகிறது தமிழரசு கட்சி.

இதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

தமிழ் தேசிய பரப்பில் போலிகட்சிகளும் உள்ளன. தமிழரசுக் கட்சிதான் சிறந்ததென அனைவருக்கும் தெரியும். இவ்வருடம் இரண்டு தேர்தல்கள் வரும். சட்டத்தின்படியும் அரசியல் அமைப்பின்படியும் முதலாவது ஜனாதிபதி தேர்தல்தான் வரவேண்டும்.

ஜூன் மாதத்திற்குப் பின்னர் ஜனாதிபதியின் பொறுப்புக்கள் அனைத்தும் தேர்தல் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்றார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT