Home » நான்கு வருடங்களின் பின்னர் தாய் எயார்வேஸ் விமானம்

நான்கு வருடங்களின் பின்னர் தாய் எயார்வேஸ் விமானம்

by sachintha
April 2, 2024 6:10 am 0 comment

150 பயணிகளுடன் கொழும்பு வருகை

நான்கு வருடங்களின் பின்னர் தாய் எயார்வேஸ் விமானம் TG 307 கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்ததாக துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.

இவ்விமானம் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 11.55 மணியளவில் விமான நிலையத்தை வந்தடைந்தது. இதில் தாய்லாந்து பிரஜைகள் உட்பட 150 வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் நாட்டுக்கு வந்துள்ளனர்.

இவ்விமானம் நேற்று (01) காலை 7.05 மணியளவில் தாய்லாந்து திரும்பியதாகவும், தாய்லாந்துக்கும் இலங்கைக்கும் இடையிலான விமான சேவைகள் தினமும் இடம்பெறுவதாகவும் கட்டுநாயக்க விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, இந்த விமானத்தையும் சுற்றுலா பயணிகளையும் வரவேற்க விமான நிலையத்திற்கு சென்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT