Thursday, April 25, 2024
Home » வித்யா படுகொலை மரண தண்டனை கைதி மரணம்

வித்யா படுகொலை மரண தண்டனை கைதி மரணம்

- சிறையில் சுகவீனமுற்ற நிலையில் சம்பவம்

by sachintha
April 2, 2024 8:24 am 0 comment

யாழ்ப்பாணம் சிவலோகநாதன் வித்யாவின் படுகொலை தொடர்பில், மரண தண்டனை தீர்ப்பளிக்கப்பட்டு பல்லேகல சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பூபாலசிங்கம் நவகுமார் திடீர் சுகவீனம் காரணமாக மரணமடைந்துள்ளார்.

39 வயதுடைய பூபால சிங்கம் நவகுமார், தமது மரண தண்டனை தீர்ப்பு தொடர்பில் ஆட்சேபனையொன்றை சமர்ப்பித்திருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர். மரண தண்டனை விதிக்கப்பட்டு கண்டி பல்லேகல தும்பர சிறைச்சாலையில் வைக்கப்பட்ட பின்னர், இடைக்கிடை சுகவீனமுற்று சிறைச்சாலை வைத்தியசாலை மற்றும் கண்டி தேசிய வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டு இவர் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

சுகவீனம் காரணமாக நேற்று முன்தினம் கண்டி தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர் உயிரிழந்துள்ளதாக ஆஸ்பத்திரி வட்டாரங்கள் தெரிவித்தன.

மரண பரிசோதனை கண்டி தேசிய வைத்தியசாலையில் இடம்பெறவுள்ளதுடன். மரணத்துக்கான உறுதியான காரணம் அதன்பின்னரே வெளியிடப்படுமென்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வித்யா கொலை வழக்கில் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதிபதிகள் குழாம், சுவிஸ் குமார் உள்ளிட்ட 7 பேருக்கு மரண தண்டனை விதித்தது. யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகம் இளஞ்செழியன், திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர், வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசி மகேந்திரன் ஆகியோரின் ஏகமனதான தீர்மானத்துக்கு அமைய, இவர்களுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது.

சிறுமி வித்யா கடந்த 2015 மே மாதம் 13ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் கொலை செய்யப்பட்டார். இக்கொலை வழக்கு தொடர்பில் கைது செய்யப்பட்ட 7 பேருக்கும் 2017ஆம் ஆண்டு மரண தண்டனை வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

லோரன்ஸ் செல்வநாயகம்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT