Home » தென்னாபிரிக்க அணிக்கு இலங்கை மகளிர் பதிலடி

தென்னாபிரிக்க அணிக்கு இலங்கை மகளிர் பதிலடி

by damith
April 1, 2024 11:56 am 0 comment

பதினெட்டு வயதான விஷ்மி குணரத்ன டி20 சர்வதேச போட்டியில் பெற்ற முதல் அரைச்சதத்தின் உதவியோடு தென்னாபிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் 7 விக்கெட்டுகளால் வெற்றியீட்டிய இலங்கை மகளிர் அணி தொடரை 1–1 என சமநிலைக்கு கொண்டுவந்தது.

பொட்ச்செப்ரூமில் நேற்று முன்தினம் (30) நடைபெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க மகளிர் அணி 20 ஓவர்களுக்கும் 8 விக்கெட்டுகளை இழந்து 137 ஓட்டங்களை பெற்றது. ஆரம்ப விராங்கனை அனெக் கொச் 50 ஓட்டங்களை பெற்றார். தொடர்ந்து பதிலெடுத்தாடிய இலங்கை மகளிர் அணி 18.5 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கான 138 ஓட்டங்களை எட்டியது. விஷ்மி குணரத்ன ஆட்டமிழக்காது 65 ஓட்டங்களை பெற்றதோடு கவிஷா டில்ஹாரி ஆட்டமிழக்காது 45 ஓட்டங்களை குவித்தார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT