கொழும்பு 14, கிரேண்ட்பாஸ், கெத்தாராம சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்கு அருகில் அமைந்திருக்கும் ஸ்ரீ கனகதுர்க்கை அம்மன் (முனியப்பர்) ஆலயத்தின் 12ஆவது ஆண்டு வருஷாபிஷேக பெருவிழா நேற்றுக் காலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. நேற்று மாலை அபிஷேகம் மற்றும் வசந்தமண்டப பூஜை என்பன இடம்பெற்றன.
இதேபோல் தொடர்ந்து பத்து நாட்களுக்கு தினமும் மாலை வேளையில் அம்பாளுக்கு அபிஷேகமும் வசந்தமண்டப பூஜையும் நடைபெற திருவருள் கூடியுள்ளது.
இவ்வாலயத்தில் எதிர்வரும் 3ஆம் திகதி புதன்கிழமை மாலை 4 மணிக்கு கற்பூரச் சட்டி ஊர்வலமும் எதிர்வரும் 4ஆம் திகதி வியாழக்கிழமை மாலை 4 மணிக்கு வேட்டைத்திருவிழாவும் எதிர்வரும் 5ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்கு மாவிளக்கு பூஜையும் இடம்பெறும்.
எதிர்வரும் 9ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 7 மணிக்கு கொழும்பு 12, ஆமர்வீதி பெரடைஸ் பிளேஸ் பத்ரகாளியம்மன் திருக்ேகாவிலிருந்து பாற்குட பவனி ஆரம்பமாகும். இந்த பாற்குடபவனி ஆமர்வீதி, கிரேண்ட்பாஸ் வீதி, டொக்டர் பாபபுள்ள பிளேஸ் வழியாக ஆலயத்தை அடைந்ததும் அம்பாளுக்கு 1008 சத சங்காபிஷேகம், பாலாபிஷேகம் என்பன நடத்தப்பட்டு அன்னதானம் வழங்கப்படும். எதிர்வரும் 10 ஆம் திகதி காலை 9.30 மணிக்கு இடம்பெறும் வசந்த மண்டப பூஜையைத் தொடர்ந்து ரதபவனி இடம்பெறும்.
எதிர்வரும் 11 ஆம் திகதி காலை 9.30 மணிக்கு தீர்த்தோற்சவமும் மாலை 6 மணிக்கு திருவூஞ்சல் திருவிழாவும் கொடியிறக்கமும் இடம்பெறும். எதிர்வரும் 12 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்கு பூங்காவனமும் எதிர்வரும் 13 ஆம் திகதி சனிக்கிழமை மாலை 4 மணிக்கு வைரவர் மடையும் இடம்பெறும்.
திருமதி பவானி சிவா அறநெறி ஆசிரியர்