Friday, June 21, 2024
Home » மானுடவியல்

மானுடவியல்

by damith
April 1, 2024 9:31 am 0 comment

பிள்ளையார் விழித்தெழுந்து, தாங்கண்ட சொப்பனத்தைத் தந்தையாருக்கும் அடியார்களுக்கும் அருளிச்செய்து, வைகறையிலே விபூதி தரித்து ஸ்ரீபஞ்சாக்ஷரத்தை ஓதிக்கொண்டு எழுந்தருளினார். சூரியோதய காலத்திலே பிராமணர்கள் சிவனடியார்களோடு ஹரஹர என்னும் ஓசையுடனே முத்துச்சிவிகை முதலியனவற்றைக் கொண்டு எதிரே வந்து, பிள்ளையாரை வணங்கி நின்று, “இவை திருவரத்துறையில் வீற்றிருக்கின்ற கடவுள் தந்த பொருள்கள், ஏற்றருளும்” என்றார்கள். பிள்ளையார் அதைக்கேட்டு, அக்கடவுளுடைய திருவருளை “எந்தையீசனெம்பெருமான்” என்னுந் திருப்பதிகத்தினாலே பாடி திருவருள் வடிவாகிய முத்துச்சிவிகையை வலஞ்செய்து, பூமியிலே விழுந்து நமஸ்கரித்து எழுந்து ஸ்ரீபஞ்சாக்ஷரத்தை ஓதிக்கொண்டு, உலகமெல்லாம் உய்யும்படி, அதில் ஏறியருளினார். அப்பொழுது சிவனடியார்களெல்லாரும் ஆரவாரித்தார்கள். பிராமணர்கள் சமஸ்தரும் வேதகோஷஞ் செய்தார்கள். இந்திராதிதேவர்கள் ஆரவாரித்துப் புஷ்பமாரி பொழிந்தார்கள். பலவகைப்பட்ட மங்கலவாத்தியங்கள் ஒலித்தன. முத்துச்சிவிகையிலே ஏறியருளிய பரமகருணாநிதியாகிய திருஞானசம்பந்தப்பிள்ளையார், மேலே முத்துக்குடை நிழற்றவும் சிவனடியார்களும் பிராமணர்களும் நெருங்கி ஆனந்தமேலீட்டினாலே கூத்தாடித் தங்கள் கண்களின்றும் பொழிகின்ற ஆனந்தவெள்ளத்தினுள்ளே குளிக்கவும், முத்துச்சின்னங்கள் “சமஸ்தலோகங்களும் சிவனடியார்களும் வேதங்களும் உய்யும்படி சைவசிகாமணி வந்தார்;

(தொடரும்)

கலாநிதி சிவ கு.வை.க. வைத்தீஸ்வர குருக்கள் தலைவர், இந்துக் குருமார் அமைப்பு.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT