Monday, April 22, 2024
Home » நாடுள்ள நிலையில் ரணிலே மீண்டும் ஜனாதிபதியாக வேண்டும்

நாடுள்ள நிலையில் ரணிலே மீண்டும் ஜனாதிபதியாக வேண்டும்

by damith
April 1, 2024 9:00 am 0 comment

தற்போது, நாடு உள்ள நிலையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவே மீண்டும் ஜனாதிபதியாக வருவதே சரியானதென, இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்ட கூட்டுறவு அபிவிருத்தி திணைக்களத்தின் 2024 சர்வதேச மகளிர் தின நிகழ்வு மட்டக்களப்பில் இடம் பெற்றது.

மட்டக்களப்பு அரசடி தேவநாயகம் கூட்டுற கலையரங்கில், கிழக்கு மாகாண கூட்டுறவு ஆணையாளரும் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளருமாகிய நா.மதிவண்ணன் தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக வர்த்தக இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் கலந்து சிறப்பித்தார்.இங்கு உரையாற்றிய போதே அவர், இவ்வாறு குறிப்பிட்டார். இந்நிகழ்வின் விசேட அதிதியாக மட்டக்களப்பு கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் கே.வீ.தங்கவேல், சிறப்பு அதிதியாக கிழக்கு மாகாண கூட்டுறவு பயிற்சி பிரிவு பொறுப்பாளர் க.வேல்வேந்தன் உள்ளிட்டோர் கலந்து சிறப்பித்தனர்.

பெண்களின் உரிமைகளை வலியுறுத்தி மட்டக்களப்பு இந்துக்கல்லூரியிலிருந்து ஆரம்பமான பேரணி, தேவநாயகம் மண்டபம் வரை வந்தடைந்தது.

மங்கள விளக்கேற்றலுடன்,நடனக் கலைஞர்களின் வரவேற்பு நடனத்து நிகழ்வு ஆரம்பமானது.மட்டக்களப்பு மாவட்ட கூட்டுறவுத் துறைக்கு பங்காற்றிய மகளிருக்கு இராஜாங்க அமைச்சர் பொன்னாடை போர்த்தி கௌரவித்தார். சம்பள உயர்வு உள்ளிட்ட விடயங்கள் சிலவற்றைக் கோரி இராஜாங்க அமைச்சரிடம் மகஜர் ஒன்றும் இதன்போது கையளிக்கட்டது

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT