முன்னாள் உதவிக் கல்விப்பணிப்பாளர் மர்ஹூம் கே.எம்.நஜ்முதீனின் நினைவுப் பகிர்தல்’ நிகழ்வு அண்மையில் அக்கரைப்பற்று கடற்கரை தனியார் விடுதியில் பேராசிரியர் எஸ்.ஏ.ரவூப் தலைமையில் நடைபெற்றது. ‘திறந்த சமூகத்தில் புத்திஜீவிகளின் பங்களிப்பு’ என்ற தலைப்பில் பேராசிரியர் எஸ்.ஏ.ரவூப், கல்வி சமூகத்திற்கு மர்ஹூம் நஜ்முதீன் சேர் செய்த பங்களிப்புக்கள்,பணிகளை நினைவுகூர்ந்தார். ஓய்வு நிலை கல்வி அதிகாரிகள், கல்வியலாளர்கள், புத்திஜீவிகள், இலக்கியவாதிகள், உலமாக்கள் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். மர்ஹூம் நஜ்முதீன் சேரின் பங்களிப்புகளை நூலாக ஆவணமாக்குதல், அவர் பெயரில் நூல்களை பொது நூலகங்கள், பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு அன்பளிப்புச் செய்தல் குறித்து சிறாஜ் மஸூர் கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.
(அக்கரைப்பற்று வடக்கு தினகரன் நிருபர்)முன்னாள் உதவிக் கல்விப் பணிப்பாளர் மர்ஹூம் நஜ்முதீனின் நினைவுப் பகிர்தல்
230
previous post