Saturday, May 25, 2024
Home » இலங்கை முஸ்லிம்களின் மேம்பாட்டுக்காக அர்ப்பணிப்போடு உழைத்தவர் மெளலவி இப்றாஹீம்

இலங்கை முஸ்லிம்களின் மேம்பாட்டுக்காக அர்ப்பணிப்போடு உழைத்தவர் மெளலவி இப்றாஹீம்

கிழக்கு முஸ்லிம் கல்விப் பேரவை

by damith
April 1, 2024 9:40 am 0 comment

இலங்கை முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் கடந்த அரை நூற்றாண்டுக்கும் மேலாக சன்மார்க்க பணி, சமூகப் பணி, தீர்க்க தரிசனமிக்க கல்விப் பணி ஆற்றி பெரும் வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ள பேராதனைப் பல்கலைக்கழக முன்னாள் விரிவுரையாளர், இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் ஆரம்ப கால தலைவர், பல இஸ்லாமிய கல்வி நிறுவனங்களின் ஸ்தாபகர் மெளலவி ஏ.எல்.எம். இப்றாஹீமின் மரணச் செய்தி முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளதாக கிழக்கு முஸ்லிம் கல்விப் பேரவை தனது அனுதாப செய்தியில் தெரிவித்துள்ளது.

பேரவையின் தலைவர் பேராசிரியர் மெளலவி ஜலால்தீன் விடுத்துள்ள அறிக்கையில், மெளலவி இப்றாஹீம் இலங்கை முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் ஆற்றிய பணிகள் மிகவும் தீர்க்க தரிசனமிக்க பணிகள் மட்டுமன்றி, இச் சமூகத்தின் எதிர்கால நலனையும் அடிப்படையாகக் கொண்டவையாகும்.

இலங்கையின் சுதந்திரத்தின் பின்னர், குறிப்பாக கடந்த அரை நூற்றாண்டுகாலம் முஸ்லிம் சமூகம் எதிர்கொண்ட பல்வேறு சவால்களுக்கு எதிர் நீச்சலாக மெளலவி இப்றாஹீம் பல்வேறு திட்டங்கள் அமைந்துள்ளது என்பது அது பற்றிய ஆய்வை மேற்கொள்வோர் கண்டு கொள்ளலாம்.

குறிப்பாக, பெண்களுக்கான கல்வியை நவீன மயப்படுத்தியமை, ஆங்கிலம், நவீன தொழில் நுட்பம் உடையதாக அதை மாற்றியமை, முஸ்லிம்கள் சிறுபான்மையினராக வாழும் இந்நாட்டின் பெரும்பான்மை சமூகத்தின் மொழியான சிங்கள மொழியில் பரீட்சயம் கொண்ட மார்க்க அறிஞர்களை உருவாக்கியமை இலங்கை முஸ்லிம்கள் நாட்டின் நலனை அடிப்படையாகக் கொண்டு செயல்படுவதற்கான திட்டங்கள், முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கிய பல்வேறு காலகட்ட இனக்கலவரங்களில் இருந்து மீள்வதற்கான வழிகள், முஸ்லிம்களின் பெருமதிப்பிற்குரிய உலமாக்களின் சபையான அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையை மிகவும் ஆளுமையும், ஆற்றலும் கொண்டதாக மாற்றுதல் என பல பரிமாணங்களை கொண்டதாக மெளலவி இப்றாஹீமின் திட்டங்கள் அமைந்திருந்தன.

தனது பல்கலைக்கழக ஆசிரியப் பணியில் பல ஆற்றலும், அறிவும் கொண்ட புத்திஜீவிகளின் உருவாக்கத்தில் மெளலவி இப்றாஹீமின் பங்களிப்பு என்றும் நினைவு கூரப்பட வேண்டியவையாகும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT