Saturday, May 25, 2024
Home » மட்டக்களப்பு மாவட்டத்தில் வெற்றிகரமாக முன்னெடுப்பு
மாணவர்களுக்கான ஜனாதிபதியின் சத்துணவுத் திட்டம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் வெற்றிகரமாக முன்னெடுப்பு

by damith
April 1, 2024 10:03 am 0 comment

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் எண்ணக்கருவுக்கமைய கல்வி அமைச்சு மற்றும் மாகாண கல்வி அமைச்சின் வழிகாட்டுதலில் வலயக் கல்வி அலுவலகங்களின் மேற்பார்வையில் முன்னெடுக்கப்பட்டு வரும் பாடசாலை மாணவர்களுக்கான போசாக்கு உணவு வழங்கும் திட்டம் தற்பொழுது கிழக்கு மாகாணத்தில் மிகவும் வெற்றிகரமான முறையில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இதற்கமைய மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள ஐந்து கல்வி வலைய அலுவலக பிரிவுகளில் செயல்படும் 326 பாடசாலைகளில் 52,473 மாணவர்களுக்கு இந்த போசாக்கு உணவு வழங்கும் திட்டம் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

இந்த விசேட திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியில் இந்த போசாக்குணவு வழங்கும் திட்டம் (28) வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. கல்லூரி அதிபர் கே. பாஸ்கர் தலைமையில் இந்தத் திட்டம் முன்னெடுக்கப்பட்டன. இத்திட்டத்தில் பாடசாலை மாணவர்களுக்கு போசா க்கான உணவுகள் வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் ஐக்கிய தேசியக் கட்சியின் மட்டக்களப்பு மாநகர சபை வலய அமைப்பாளர் பீ.ரீ.அப்துல் லத்தீப் கருத்து தெரிவிக்கையில்; ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் எண்ணக் கருவுக்கமைய வழங்கப்படும் இந்த போசாக்கு உணவு விநியோகிக்கும் திட்டம் மாணவர்களுக்கு மிகுந்த பிரயோசனம் அளிப்பதுடன் குறிப்பாக வறிய மாணவர்களுக்கு இது மிகவும் வரப் பிரசாதம் என தெரிவித்தார்.

இந்தத் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தின் மத்திய கல்வி வலய பிரிவிலுள்ள 66 பாடசாலைகளிலுள்ள 13 ஆயிரத்து 858 மாணவர்களுக்கும் மட்டக்களப்பு மேற்குபிரிவில் 68 பாடசாலைகளிலுள்ள 13 ஆயிரத்து 954 மாணவர்களுக்கும் இந்தபோசாக்கு உணவு வழங்கப்படுகிறது.

மட்டக்களப்பு சுழற்சி நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT