Thursday, April 25, 2024
Home » பாதாள உலக கும்பலை ஒடுக்க மோட்டார் சைக்கிள் படையணி

பாதாள உலக கும்பலை ஒடுக்க மோட்டார் சைக்கிள் படையணி

நூறு பொலிஸாரடங்கிய குழு ரோந்து

by damith
April 1, 2024 7:00 am 0 comment

பாதாள உலக கும்பலை ஒடுக்கும் நோக்கில் நூறு பொலிஸாரைக் கொண்ட மோட்டார் சைக்கிள் படையணிகளை, மேல் மாகாணம் மற்றும் காலியில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மாஅதிபர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

இந்த மோட்டார் சைக்கிள் படையணி சக்தி வாய்ந்ததெனவும் குற்றவாளிகள் தப்பிச் செல்லும் போது, அவர்களை துரத்திச் சென்று பிடிப்பதற்கு இலகுவாக்கும் வலுவைக் கொண்டதாக இந்த படையணி அமைக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். இதற்காக பொலிஸ் உத்தியோகத்தர்களை உள்வாங்குவதற்கான பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவு செய்யப்பட்ட 100 பேர் தற்காலிகமாக பொலிஸ் விசேட அதிரடிப்படையில் இணைக்கப்பட்டு தேவையான பயிற்சிகள் வழங்குவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

பாதாள உலகக் குற்றச் செயல்களை முறியடிப்பதற்காக தற்போது பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள 20 குழுக்களுக்கு மேலதிகமாக, இந்த மோட்டார் சைக்கிள் படை அணியும் ஈடுபடுத்தப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT