Thursday, May 23, 2024
Home » ICBT – Sunderland பழைய மாணவர் சந்திப்பு 2024

ICBT – Sunderland பழைய மாணவர் சந்திப்பு 2024

- சிறப்பான கல்வி மற்றும் பூகோள வலையமைப்புக்களை கொண்டாடுதல்

by Rizwan Segu Mohideen
March 27, 2024 3:44 pm 0 comment

இலங்கையின் உயர்கல்வி கட்டமைப்பில், நீண்டகாலமாக தலைமையை வகிக்கும் ICBT கெம்பஸானது, அதனது University of Sunderland இன் வருடாந்த பழைய மாணவர் கூட்டத்தை கொழும்பு கிங்க்ஸ்பெரி ஹோட்டலில் பெருமையுடன் நடாத்தியது. ஐக்கிய இராச்சியத்தின் மதிப்பிற்குரிய University of Sunderland இன் பிரதிநிதியாக இரு தசாப்தங்களிற்கும் மேலாக சேவையாற்றும், ICBT கெம்பஸானது, இந்நன்கறியப்பட்ட ஐக்கிய இராச்சிய நிறுவகத்திலிருந்து தரமான உயர் கல்வியை பெற்றுக்கொண்ட பல்லாயிரக்கணக்கான இலங்கை மாணவர்களுக்கு அடித்தளமாக விளங்கியது.   

சமீபத்தில் நிறைவுபெற்ற பழைய மாணவர் சந்திப்பானது பட்டாதரிகளிற்கு மீளவும் தொடர்புரவும், அவர்களது பகிரப்பட்ட அனுபவங்களை கொண்டாடவும், மற்றும் வலுவான வலையமைப்பினை பேணவுமாக துடிப்பானதொரு மேடையயை அமைத்துத்தந்தது. இப்பழைய மாணவர்களில் பலர் இலங்கையிலும் சர்வதேச மட்டத்திலுமான நிறுவனங்களில் செல்வாக்குமிக்க பதவிகளை வகிப்பதானது, பன்முகப்பட்ட கற்கைநெறிகளுடனான ICBT – Sunderland பங்குடைமையின் வெற்றியை எடுத்துக்காட்டுவதாக அமைகின்றது

இம்மாபெரும் களியாட்டமானது 100 இற்கும் மேற்பட்ட ICBT – Sunderland பழைய மாணவர்களது பங்கேற்புடன் இடம்பெற்றிருந்ததுடன், இந்நிகழ்வானது ICBT கெம்பஸpன் தவிசாளர், கலாநிதி. ஜகத் அல்விஸ், ICBT கெம்பஸpன் நிறைவேற்றுப் பணிப்பாளர் / நிறைவேற்று நிர்வாக பீடாதிபதி/ பிரதம நிறைவேற்று அதிகாரி, கலாநிதி சம்பத் கன்னங்கர மற்றும் ICBT கெம்பஸpன் சிரேஷ்ட முகாமைத்துவ குழுவின் ஏனைய உறுப்பினர்களினாலும், அதேவேளை University of Sunderland இன்  பிரதம நிதி அலுவலர் திரு. பென் டேல், University of Sunderland இன் சர்வதேச அபிவிருத்தி தலைவர் ஜெமி சிம்ப்ஸன்,  University of Sunderland இன் சர்வதேச வர்த்தக ஆதரவு துறைத்தலைவர் திருமதி ஏஞ்சலா மேசன், University of Sunderland இன் கற்கைகள் துணைத் தலைவர் (CPD மற்றும் சர்வதேச தாதியம்) திருமதி கரன் கில்ஸ், University of Sunderland இன் தாதியத்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் திருமதி எலிசபெத் கிளார்க், University of Sunderland இன் தெற்காசியாவிற்கான ஆட்சேர்ப்பு மற்றும் பங்குடைமை பணிப்பாளர், திருமதி பாவ்னா பக்கா, University of Sunderland இன் பிரதி சர்வதேச ஆதரவு முகாமையாளர், திருமதி ஜுலி பெஸ்கோட் என University of Sunderland இனை பிரதிநிதித்துவப்படுத்தியவர்களினாலும் பெருமைப்படுத்தப்பட்டிருந்தது.  

 “இப்பழைய மாணவர் சந்திப்பானது, இரு தசாப்தங்களிற்கும் மேலாக University of Sunderland இன் இலங்கைக்கான முன்னணி பிரதிநிதியாக, பல வருடங்களாக எமது மாணவர்களிற்கு தரமானதும் சர்வதேச ரீதியிலானதுமான கல்வியை வழங்குவதிலான எமது வெற்றிகரமான முயற்சிகளிற்கு ஒரு சான்றாக விளங்குகின்றது. உலகளாவிய ரீதியிலும் இலங்கையிலுமாக முன்னணி அமைப்புக்களில் பரவியிருக்கும் ICBT – Sunderland இன் மாணவர்களது எண்ணிக்கையானது இலங்கை மாணவர்களிற்கு சிறந்த உயர் கல்வியை வழங்குதல் எனும் ஒற்றை நோக்கத்திற்கான எமது தளராத அர்ப்பணிப்புக்களது பிரதியாக விளங்குகின்றதுஎனக்குறித்துரைத்தார்  ICBT கெம்பஸpன் நிறைவேற்றுப் பணிப்பாளர்/ நிறைவேற்று நிர்வாக பீடாதிபதி/ பிரதம நிறைவேற்று அதிகாரி, கலாநிதி சம்பத் கன்னங்கர அவர்கள்

கார்டியன் பல்கலைக்கழக வழிகாட்டி 2024 இல் சிறந்த 50 பல்கலைக்கழகங்களில் ஒன்றாக தரப்படுத்தப்பட்டுள்ள, University of Sunderland ஆனது, அரச மற்றும் தனியார் துறைகளின் கூட்டிணைவுடன் உலகில் முன்னணி ஆய்வுகளை வழங்கி, கல்வி தரத்தினில் 125 வருட பாரம்பரிய பெருமையினை கொண்டுள்ளது.  ICBT கெம்பஸ் ஊடாக, பல்கலைக்கழகமானது வியாபார முகாமைத்துவம், தாதியப் பயிற்சி, இயந்திர பொறியியல், மின் மற்றும் மின்சாதன பொறியியல், தன்னியக்க பொறியியல் மற்றும் வலையமைப்பு முறைமை பொறியியல் முதலியன உள்ளடங்களாக, பல்வேறு பாடப்பரப்புக்களில் பலவிதமான மட்டங்களில் இளநிலை மற்றும் பட்டப்பின் கற்கைகள் என்பவற்றை வழங்குகின்றது.  

2000 ஆம் ஆண்டினில் தாபிக்கப்பட்ட, ICBT கெம்பஸானது 65,000 இற்கும் மேற்பட்ட உலகளாவிய பழைய மாணவர்கள் வலையமைப்புடன் இலங்கையின் அதிமுக்கியமான தனியார் உயர்கல்வி நிறுவனமாக விளங்குகின்றது. நாடளாவிய ரீதியில் பல்வேறு கெம்பஸ்களின் ஊடாக 15,000 மாணவர்களை தற்போது கொண்டிருக்கும், ICBT ஆனது, ஐக்கிய இராச்சியம் மற்றும் அவுஸ்திரேலியாவின் நன்கறியப்பட்ட பல சர்வதேச பல்கலைக்கழகங்களின் நம்பிக்கைமிகு பங்குதாரராக விளங்குகின்றது. சான்றிதழ் கற்கைநெறிகள், டிப்ளோமாக்கள், உயர் டிப்ளோமாக்கள், முற்பல்கலைக்கழக அடிப்படை கற்கைநெறிகள், இளநிலை கற்கைநெறிகள், மற்றும் முதுநிலை கற்கைநெறிகள் என வழங்கப்படுகின்ற கற்கைநெறிகளானவை பன்முக பாடப்பரப்புக்களின் பல்வேறு மட்டங்களை பூர்த்திசெய்வதாகவுள்ளது.  

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT