Thursday, June 20, 2024
Home » சுற்றுலா பயணிகளை கவரும் விசேட நவீன ரயில் சேவைகள்

சுற்றுலா பயணிகளை கவரும் விசேட நவீன ரயில் சேவைகள்

ஏப்ரல் 05 முதல் கொழும்பிலிருந்து பதுளைக்கு

by mahesh
March 27, 2024 6:20 am 0 comment

சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை வரைக்கும் விசேட நவீன ரயில் சேவையொன்றை முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து மற்றும் ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இந்த ரயில் சேவை ஏப்ரல் 05 முதல் நடத்தப்படவுள்ளது. மேலும், நானு ஓயாவிலிருந்து பதுளை வரை சுற்றுலா பயணிகளுக்கான விசேட காட்சி காண் கூடத்துடன் இணைந்த ரயில் சேவையை நடத்தவும் தீர்மானித்துள்ள தாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அமைச்சர்: எதிர்வரும் ஏப்ரல் 05ஆம் திகதி எல்ல, நைன் ஆச் ஆகிய சுற்றுலா பிரதேசங்கள் ஊடாக மேற்படி இரண்டு ரயில்களும் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன. ஒரு ரயில் தினமும் காலை 6.30 மணிக்கு ஒரு நாள் விட்டு ஒரு நாள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளது.

லோரன்ஸ் செல்வநாயகம்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT