Monday, May 20, 2024
Home » IPL 2024: சென்னை வந்தடைந்த ‘யோர்க்கர் நாயகன்’ மதீஷ பத்திரண

IPL 2024: சென்னை வந்தடைந்த ‘யோர்க்கர் நாயகன்’ மதீஷ பத்திரண

- சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சி முகாமில் இணைவு

by Prashahini
March 25, 2024 3:05 pm 0 comment

17ஆவது சீசன் ஐபிஎல் தொடர் கோலாகலமாக தொடங்கியுள்ளது. இதில் முதல் லீக் போட்டியிலேயே நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பெற்றதுடன், நடப்பு IPL தொடரையும் வெற்றியுடன் தொடங்கியுள்ளது. இதனையடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது இரண்டாவது போட்டியில் நாளை (26) குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்த்து விளையாடவுள்ளது.

இப்போட்டியும் சென்னை சேப்பாக்கத்திலுள்ள எம்ஏ சிதம்பரம் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டிக்காக தற்போது CSK அணி வீரர்கள் பயிற்சியை தொடங்கியுள்ளனர். இந்நிலையில் காயம் காரணமாக முதல் போட்டியைத் தவறவிட்ட CSK அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் மதீஷ பத்திரண, நேற்று முன்தினம் (23) சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சி முகாமில் இணைந்துள்ளார்.

முன்னதாக பங்களாதேஷ் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணியில் மதீஷா பதிரனா இடம்பிடித்திருந்தார். அப்போது தொடரின்போது பதிரானாவுக்கு காயம் ஏற்பட்டது. இந்த காயத்தில் இருந்து இன்னும் முழுமையாக மதீஷ பத்திரண குணமடையாததால், IPL தொடரின் தொடக்க போட்டிகளில் விளையாட முடியாது என்ற தகவல் வெளியானது.

இதனையடுத்து அவர் தற்போது CSK அணியில் இணைந்துள்ளார். இருப்பினும் அடுத்த போட்டியில் விளையாடுவாரா என்பது குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. கடந்த IPL சீசனில் CSK அணியின் டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட்டாக வலம் வந்த பதிரன, CSK அணி 5ஆவது முறை கோப்பையை வெல்வதற்கு முக்கிய காரணமாக இருந்தார். இதனால் அவரது வருகை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மேலும் பலத்தை கூட்டியுள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ்: மகேந்திர சிங் தோனி, ருதுராஜ் கெய்க்வாட்(கேப்டன்), அஜிங்கியா ரகானே, ஷேக் ரஷீத், சமீர் ரிஸ்வி, டெவோன் கான்வே, ரவீந்திர ஜடேஜா, மிட்சல் சான்ட்னர், மொயின் அலி, ஷிவம் துபே, நிஷாந்த் சிந்து, அஜய் மண்டல், ரச்சின் ரவீந்தரா, டேரில் மிட்சல், ராஜ்யவர்தன் ஹங்கர்கேகர், தீபக் சகர், மதிஷா தீக்ஷனா, மதீஷ பத்திரண, முகேஷ் சௌத்திரி, முஸ்தஃபிஸூர் ரஹ்மான், பிரசாந்த் சோலங்கி, சிமர்ஜித் சிங், துஷார் தேஷ்பாண்டே, ஷர்துல் தாக்கூர், அவினாஷ் ராவ் ஆரவலி.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT