பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கும் மலேசிய நாடாளுமன்ற உறுப்பினர் டட்டுக் சரவணனுக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ஏற்பாட்டில் இன்று (23) அலரிமாளிகையில் இடம்பெற்றது.
இந்த சந்திப்பில் இருநாடுகளுக்குமிடையிலான நட்புறவை வலுப்படுத்துவது குறித்து இருவரும் கலந்துரையாடினர்.
அதேபோன்று டட்டுக் சரவணன் மனிதவள அமைச்சராக இருந்த காலப்பகுதியில் இலங்கையர்கள் 10,000 பேருக்கு மலேசியா வேலைவாய்ப்பு வீசாவை பெற்றுக்கொடுக்க நடவடிக்கையெடுத்திருந்தார்.
இந்த நடவடிக்கைக்கு தொடர் முயற்சிகளை மேற்கொண்ட கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கு பிரதமர் தினேஷ் குணவர்தன பாராட்டுக்களை தெரிவித்தார்.
இதன் பிரகாரம் தற்போது மலேசியாவில் 1853 இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பு விசா வழங்கப்பட்டு பயனடைந்துள்ளனர்.
மேலும் மலேசிய நாடாளுமன்ற உறுப்பினர் டட்டுக் சரவணன் கருத்து தெரிவிக்கையில் இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார விழ்ச்சியில் இருந்து, இலங்கையை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,பிரதமர் தினேஷ் குணவர்தன ஆகியோர் மிக விரைவாக மீட்டெடுத்தது சிறந்த நிர்வாக திறனை வெளிப்படுத்தியது ஏனைய நாடுகளுக்கு ஒரு சிறந்த முன்னுதாரணமாக உள்ளது எனவும் தெரிவித்தார்.