Thursday, June 20, 2024
Home » மலையக பாடசாலைகளின் ஆளணி பௌதீக பற்றாக்குறைகளுக்குத் தீர்வு

மலையக பாடசாலைகளின் ஆளணி பௌதீக பற்றாக்குறைகளுக்குத் தீர்வு

புதிய திட்டமூடாக கல்வியமைச்சு கவனம்

by Gayan Abeykoon
March 22, 2024 9:43 am 0 comment

மலையக பாடசாலைகளில் நிலவும் கணித, விஞ்ஞான, தொழில்நுட்ப ஆசிரியர் பற்றாக்குறையை தீர்க்க புதிய திட்டம் வகுக்கப்படவுள்ளதாக, மலையக ஒன்றியத்தின் தலைவர் வேலு குமார் எம்.பி தெரிவித்துள்ளார்.  

பாராளுமன்றத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட மலையக ஒன்றியத்தின், முதலாவது கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர்  இவ்வாறு தெரிவித்துள்ளார். இக்கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான மனோ கணேசன், சுஜித் சஞ்சய் பெரேரா மற்றும் கஜேந்திரகுமார் ஆகியோரும் கல்வி அமைச்சின் உயர் அதிகாரிகளும், கொழும்பு, கண்டி, பதுளை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் உள்ள தேசிய தமிழ் பாடசாலைகளின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டிருந்தனர்.

இதன்போது இம் மாவட்டங்களில் அமைந்துள்ள தேசிய தமிழ் பாடசாலைகளில் தற்போது நிலவும் ஆசிரிய பற்றாக்குறைகள் மற்றும் பௌதீக வளக் குறைபாடுகள் பற்றி கலந்துரையாடப்பட்டது. அவற்றுக்கான தீர்வுகளை கல்வி அமைச்சின் அதிகாரிகள் முன்வைத்தனர். இக்கலந்துரையாடலின் உயர்தர வகுப்பிற்கான ஆசிரிய பற்றாக்குறை வெளிப்படுத்தப்பட்டது.

குறிப்பாக கணித, விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப பிரிவுகளில் இந்நிலைமை மிக மோசமாக உள்ளமை வெளிக்கொணரப்பட்ட மை குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT